Illustration und Sprecher Deutsch: Martin Baltscheit
Übersetzerinnen Tamil: Radha Inthirarajah, Thaveswary Tharmaseelan
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0
mit freundlicher Genehmigung der ARAG
von Martin Baltscheit
எழுதியவர்: மார்ட்டின் பால்ற்சைற்
HIER IST DEIN PLATZ!
Es gibt viele Plätze in unserem Leben. Der allerbeste Platz ist der Arm eines Menschen, der dich liebt. Ein anderer vielleicht der Spielplatz gleich bei dir um die Ecke.
Spielplätze sind Orte für Kinder, Eltern und andere Lebewesen.
இது உனது இடம்!
எமது வாழ்வில் நிறைய இடங்கள் உள்ளன. உன்மீது பாசம் காட்டும் ஒரு மனிதனுடைய கையே மிகச் சிறந்த இடமாகும். வேறு என்னவென்றால், சிலவேளை அது உனக்கு அருகில் இருக்கும் சிறுவர் பூங்காவைக் கூறலாம்.
சிறுவர்கள், பெற்றோர்கள், மற்றும் ஏனைய உயிரினங்களுக்குமான இடங்களாக சிறுவர் பூங்காக்கள் அமைகின்றன.
Hier - wie überall in unserem Land - müssen wir miteinander auskommen, auch wenn wir uns nicht kennen und oft sehr unterschiedlich sind. Dabei helfen uns Gesetze. In Deutschland ist es ein besonders schönes Gesetz aus dem Jahr 1949: das Grundgesetz. Von diesem Gesetz und seinen Artikeln will ich dir in diesem Buch erzählen. Mit Geschichten, Gedichten und Bildern vom allerbesten Spielplatz der Welt.
Herzlich
Martin Baltscheit
இங்கு – ஏனைய இடங்களைப் போல் எமது நாட்டிலும் - வாழ்பவர்களை எமக்குத் தெரிந்திருக்காவிடினும் பலவகையில் அவர்கள் மிகவும் வேறுபட்டவர்களாக இருப்பினும் நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு எமக்கு சட்டங்கள் உதவுகின்றன.
ஜேர்மனியில் 1949 ஆம் ஆண்டிலிருந்து மிகச்சிறந்த சட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது: அடிப்படைச்சட்டம். இந்த சட்டத்திலுள்ள அத்தியாயங்களிலிருந்து சிலவற்றை, உலகின் தலைசிறந்த சிறுவர் பூங்காவாகிய இப்புத்தகத்தில் கதைகளாகவும் கவிதைகளாகவும் படங்களாகவும் நான் உனக்கு கூற விரும்புகின்றேன்.
இதயபூர்வமாக,
மார்ட்டின் பால்ற்சைற்
ARTIKEL 1
[Die Würde des Menschen ist unantastbar]
Das namenlose Mädchen
Es ist schon ein paar Jahre her, da stand ein Mädchen im Sandkasten. Mitten am Tag kam es unter dem Holunderbusch hervor.
Die schwarzen Haare bedeckten ihren Körper wie ein Kleid.
அத்தியாயம் 1
[மனிதனுடைய மதிப்பு மிகவும் உன்னதமானது]
பெயரற்ற சிறுமி
சில வருடங்களுக்கு முன்னர், ஒரு மண்தொட்டியில் சிறுமி ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். அன்று மத்தியானம் அவள் கொழுண்டர் பற்றைகளுக்கு ஊடாக வந்து சேர்ந்தாள்.
கருமையான கூந்தல் ஒரு உடையைப் போல் அவளது உடலை போர்த்தியிருந்தது.
Barfüßig und schmutzig war sie, rührte sich nicht, sprach kein Wort und nur ihre Augen glitzerten im Sonnenlicht.
Eines der Kinder fragte nach ihrem Namen, aber das Mädchen hatte keinen.
Sie fragten nach ihrem Zuhause, aber das Mädchen hatte keines.
Sie fragten nach Eltern, Geschwistern und Freunden, aber sie hatte keine.
Da wollten die Erwachsenen etwas von ihrer Vergangenheit wissen – aber das Mädchen konnte sich nicht erinnern. Und die Menschen auf dem Spielplatz machten sich Sorgen.
அவள் வெறுங்கால்களுடன் அழுக்காக இருந்தாள் , அசையவேயில்லை, ஒரு வார்த்தையும் பேசவில்லை, அத்துடன் அவளுடைய கண்கள் மட்டும் சூரிய ஒளியில் மிளிர்ந்தன.
சிறுவர்களில் ஒருவர் அவளுடைய பெயரைக் கேட்டார் , ஆனால் அச்சிறுமிக்கு பெயர் இருக்கவில்லை.
அவர்கள் அவளுடைய வீட்டைப்பற்றி விசாரித்தனர், ஆனால் அச்சிறுமிக்கு வீடும் இருக்கவில்லை.
அவர்கள் அவளுடைய பெற்றோர், சகோதரர்கள் மற்றும் நண்பர்களைப் பற்றியும் விசாரித்தனர், ஆனால் அச்சிறுமிக்கு ஒருவரும் இருக்கவில்லை.
அங்கிருந்த பெரியவர்கள் அவளுடைய கடந்தகாலத்திலிருந்து சிலவற்றை அறிந்துகொள்ள விரும்பினார்கள் - ஆனால் அவளால் அவற்றை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை. சிறுவர் பூங்காவில் இருந்த மனிதர்கள் மனம் வருந்தினார்கள்.
Was sollten sie anfangen mit einer,
die nichts hatte und nichts wusste – nicht einmal, woher sie kam?
Die einen sagten: „Kommt, wir schicken sie zurück“, und die anderen fragten: „Wohin denn?!“
Jemand Drittes meinte, man solle sie einfach stehen lassen und die meisten schwiegen.
Das Schweigen brachte die Menschen auf eine Idee. Vielleicht musste man gar nichts sagen, sondern etwas tun.
So handelten die Menschen, wie sie selbst gern behandelt worden wären, wenn sie aus einem Holunderbusch getreten wären, so ohne alles.
ஓரு மனிதரிடம் ஒன்றுமில்லை, எதுவும் தெரியாது, எந்த இடத்திலிருந்து வந்துள்ளார்? என்பதும், தெரியாதவருக்கு நாங்கள் எதைச் செய்யத் தொடங்க வேண்டும்.
„வாருங்கள், நாங்கள் இவளைத் திருப்பி அனுப்புவோம்“, என்று ஒருசிலர் கூறினர், „எங்கே அனுப்புவது?“, என்று ஏனையோர் கேட்டனர்.
மூன்றாவதாக ஒருவர், இவளை இப்படியே விட்டுவிடுவோம் என்ற கருத்தைக் கூறியதும் பெரும்பாலானோர் அமைதியாகிவிட்டனர்.
இந்த அமைதி அந்த மனிதர்களுக்கு நல்ல யோசனை ஒன்றை தோற்றுவித்தது. சிலவேளை ஒருத்தரும் ஒன்றும் சொல்லத் தேவையில்லை, ஆனால் செய்து காட்டுவோம்.
ஓன்றும் இல்லாமல் தாங்கள் கொழுண்டர் பற்றையிலிருந்து வந்து இருப்பார்களென்றால் , அவர்கள் தங்களை எவ்வாறு நடத்தியிருக்க வேண்டும் என்று விருப்பப்படுவோமோ, அவ்வாறு அம்மனிதர்கள் அவளை நடத்தினர்.
Zuerst ließen sie dem Kind ein Bad ein, wuschen ihm die Haare, trockneten es ab und schnitten die Spitzen.
Sie gaben dem Mädchen ein Kleid, zwei Kleider, Schuhe und Strümpfe. Dann suchten sie ihr einen Namen aus und wurde Elena krank, gingen sie mit ihr zum Arzt.
Das Mädchen bekam ein Zuhause.
Man kochte ihr Essen und zeigte ihr, wie eine Popcornmaschine funktioniert.
Elena hatte ein eigenes Zimmer mit Spielzeug und ein weiches Bett.
முதலில் அச்சிறுமியை குளிக்கவிட்டு, தலைமுடியைக் கழுவிக் காயவிட்டதும் நுனி முடிகளை வெட்டிவிட்டனர்.
அவர்கள் அச்சிறுமிக்கு ஒன்று, இரண்டு ஆடைகள், காலணிகள், காலுறைகள் போன்றவற்றைக் கொடுத்தனர். அதன் பின்னர் அவளுக்கு ஒரு பெயரைத் தெரிவுசெய்தனர், அத்துடன் எலெனா நோய்வாய்ப்பட்ட போது அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர்.
சிறுமிக்கு ஒரு வீடு கிடைத்தது. அவளுக்கான உணவை சமைத்தும், சோளம் பொரிக்கும் இயந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் காட்டியும் கொடுத்தனர்.
எலெனாவுக்கு விளையாட்டுப் பொருட்களுடன் மென்மையான கட்டிலும் கூடிய தனி அறை கிடைத்தது.
Man feierte ein Fest, als sie eine Familie gefunden hatte, bei der sie bleiben wollte, und nach den Sommerferien meldeten die Eltern sie in einer Schule an.
Dort lernte sie Lesen und Schreiben
und fand Freunde.
Anschließend ging sie in die Lehre und arbeitete in einem Beruf, der zu ihr passte.
ஒரு குடும்பம் கிடைத்து, அவர்களுடன் அவள் தங்குவதற்கு விரும்பியபோது, அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர் , அத்துடன் கோடைகால விடுமுறையின் பின்னர் அவள் பாடசாலை செல்வதற்கு பெற்றோர் விண்ணப்பித்தனர்.
அங்கே அவள் எழுத, வாசிக்கக் கற்றதுடன் அவளுக்கு நண்பர்களும் கிடைத்தனர்.
இறுதியாக அவள் தொழிற்கல்வியைக் கற்கச் சென்றபின்னர் , தனக்குப் பொருத்தமான தொழில் ஒன்றை செய்ய ஆரம்பித்தாள்.
Sie wurde Konditorin, machte Törtchen und Kuchen und traf einen Menschen, der nicht nur ihre Törtchen und Kuchen über alles liebte, sondern auch Elena, und sie in den Armen hielt, wann immer sie wollte.
Bald bekamen sie Kinder, die später im Sandkasten unseres Spielplatzes einen ganz fabelhaften Sandkuchen verkauften.
அவள் இனிப்புணவு வெதுப்பகர் ஆனாள், அங்கே அலங்கரிக்கப்பட்ட கிறீம் கேக்கையும் கேக்கையும் தயாரித;தாள், அங்கே அவள் ஒரு மனிதனைச் சந்தித்தாள் , அவன் அவளுடைய அலங்கரிக்கப்பட்ட கிறீம் கேக்கையும் கேக்கையும் மட்டும் விரும்பவில்லை, அதற்கும் மேலாக எலெனாவையும் சேர்த்து விரும்பினான். அவள் விரும்பும் போதெல்லாம் அவளை கரங்களால் அணைத்துக் கொண்டான்.
விரைவில் இருவருக்கும் குழந்தைகள் கிடைத்தன, பிற்காலத்தில் எங்கள் சிறுவர் பூங்காவில் இருந்த மண்தொட்டியில் அக்குழந்தைகள் அற்புதமான மண்கேக்குகளைச் செய்து விற்றனர்.
Und als viele Jahre später – nach einer sternklaren Nacht – ein Junge mit wilden Haaren und zerrissenen Hosen unter dem Holunderbusch hervortrat, seinen Namen nicht kannte und keine Ahnung hatte, woher er gekommen war, da wussten Elena und ihre Familie sofort, was zu tun war ...
மேலும் பல ஆண்டுகள் கடந்து சென்றன – நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு இரவுப் பொழுதின் பின்னர், - பற்றையான முடியுடனும் கிழிந்த காற்சட்டையுடனும் ஒரு சிறுவன் கொழுண்டர் பற்றையினூடாக வெளியே வந்தான். அவனுக்கு தன்னுடைய பெயர் தெரியவில்லை அத்துடன் எந்த இடத்திலிருந்து வந்திருக்கின்றான் என்றும் தெரியாது, ஆனால் உடனடியாக அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எலெனாவுக்கும் அவளுடைய குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்தது.
Jemand ist heimatlos, namenlos, ohne Essen und Kleidung.
Und was machen wir?
Wir helfen!
Diese Hilfe ist im Grundgesetz festgeschrieben.
Von der Unantastbarkeit der Menschenwürde handelt der erste Artikel unseres Grundgesetzes und ist damit die Basis für alle anderen Artikel.
யாரோ ஒருவர் சொந்தநாடோ , பெயரோ, உணவோ, உடையோ இல்லாமல் இருக்கிறார்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நாங்கள் உதவிகளைச் செய்வோம்!
இந்த உதவி அடிப்படைச் சட்டத்தில் நிரந்தரமாக எழுதப்பட்டுள்ளது.
எங்களுடைய அடிப்படைச் சட்டத்தின் முதலாவது அத்தியாயம் மனிதனுடைய மதிப்பு மிகவும் உன்னதமானது என்பதைப் பற்றியதாகும். இதுவே மற்ற எல்லா அத்தியாயங்களுக்கும் அடிப்படையாக உள்ளது.
So war es nicht immer.
Vor vielen Jahren haben in Deutschland die Nationalsozialisten mit Unterstützung vieler Landsleute einen Weltkrieg angezettelt.
Nachdem dieser Krieg – zum Glück für uns alle – vorbei war, haben sich Männer und Frauen in einem Parlamentarischen Rat Gedanken gemacht, wie eine solche Katastrophe in Zukunft verhindert werden kann.
Das Grundgesetz schafft die Voraussetzung für Freiheit und Gerechtigkeit.
Die Geschichte der namenlosen Kinder erzählt uns von guten Menschen in einem gerechten Land.
Wir danken den Verfassern
für dieses schöne Gesetz!
இது எப்பவும் இப்படி இருந்ததில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் இருந்த தேசியசோசலிச வாதியினர் நாட்டுமக்கள் பலரின் ஆதரவுடன் உலகப் போரை தொடக்கிவைத்தனர்.
நாம் அனைவரும் அதிஸ்டவசமாக இவற்றைக் கடந்து வந்த போது - போர் முடிவடைந்தபின்னர் , ஆண்களும் பெண்களுமாகக் கூடிய பாராளுமன்றக் கூட்டத்தில், எப்படி இவ்வாறான அழிவுகளை எதிர்காலத்தில் வராமல் தடுக்கலாம் என்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அடிப்படைச் சட்டமானது சுதந்திரத்திற்கும் நீதிக்குமான நிபந்தனைகளை நிறைவேற்றுகிறது
பெயரற்ற சிறுவர்களின் கதை ஒரு நேர்மையான நாட்டிலுள்ள நல்ல மனிதர்களைப் பற்றி எமக்குக் கூறுகின்றது.
இந்தளவு சிறப்பான சட்டங்களை இயற்றிய எழுத்தாளர்களுக்கு எமது நன்றிகள்!