Abspielen

Der Schulausflug

 von Paul Maar

Abspielen

   பாடசாலைச் சுற்றுலா

எழுதியவர்: பவுல் மார்

Fotos und Illustration: Susanne Eiynck-Smith
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzerin Tamil: Radha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0

 

Abspielen

Tina und Tim sind Freunde.
Und seit diesem Schuljahr sind sie sogar in einer Klasse.

Ihre Lehrerin heißt Frau Bode.
Frau Bode ist sehr freundlich. Sie hat gute Ideen.

 

Abspielen

ரீனாவும் ரிம்மும்  நண்பர்கள்.
அத்துடன் இந்த வருடத்திலிருந்து இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்கிறார்கள்.

அவர்களுடைய வகுப்பாசிரியையின் பெயர் திருமதி போட.
திருமதி போட மிகவும் அன்பானவர். அத்துடன் நல்ல சிந்தனை ஆற்றல் நிறைந்தவர்.

Abspielen

Sie plant mit der Klasse einen Ausflug. Die einen wollen wandern, die anderen wollen lieber mit dem Bus fahren.

„Am besten machen wir beides", sagt Frau Bode.

„Wir fahren mit dem Bus zum Steigerwald. Dann lassen wir den Bus am Waldrand stehen und wandern zu einer Ruine.“

„Zu welcher Rinne wandern wir?" fragt Jörn.

„Eine Ruine", verbessert Tina. "Das ist ein kaputtes Haus."

Frau Bode nickt. „Ja, es sind die Reste von einer alten Ritterburg. Ganz dicke Mauern und ein hoher Turm."

Abspielen

அவர் தனது வகுப்பு மாணவர்களுடன் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள ஏற்பாடு செய்கிறார். ஒரு சிலருக்கு நடைப்பயணம் மேற்கொள்ளவும், ஏனையோருக்கு பேருந்தில் பயணம் செய்யவும் விருப்பம்.

„நாங்கள் இரண்டையும் செய்வோம், அதுவே உன்னதமானது", என்று கூறுகிறார் திருமதி போட.
„நாங்கள் பேருந்தில் ஸ்ரைகர் காட்டுக்குப் போவோம். பேருந்தை காட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு பாழடைந்த கட்டடம் ஒன்றிற்கு நடைப்பயணம் செய்வோம்.“

„நாங்கள் எந்தப் பால் அடைந்த இடத்திற்கு  நடைப்பயணம் செல்கிறோம்?“ என்று கேட்கிறான் ஜோர்ன்.

„பாழடைந்த" இடம் என்றால் அது ஒரு உடைந்த வீடு, என்று திருத்துகின்றாள் ரீனா.
திருமதி போட தலையை ஆட்டுகிறார். „ஆம், அது ஒரு பழைய இராணுவக் கோட்டையின் எஞ்சியுள்ள பகுதிகள். நன்கு தடித்த சுவர்களும் ஒரு உயரமான கோபுரமும் உள்ளது.

Abspielen

Am Mittwoch früh treffen sich alle am Schillerplatz.

Da wartet schon der Bus. Pünktlich geht es los.

Nach drei Stunden hält der Bus am Waldrand. Der Fahrer sagt: „Ich warte hier solange.“

 

Abspielen

புதன்கிழமை காலை அனைவரும் சில்லர்வளாகத்தில் சந்திக்கின்றனர்.

அங்கே பேருந்து காத்திருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் புறப்படுகிறது.

மூன்று மணித்தியாலங்களின் பின்னர் காட்டின் ஓரத்தில் பேருந்து நிறுத்தப்படுகிறது. „நான் நீங்கள் திரும்பும் வரையும் இங்கே காத்திருக்கிறேன்.“ என்கிறார் ஓட்டுனர்.

Abspielen

Ein paar aus der Klasse wollen gleich losrennen.

Frau Bode ruft: „Nicht so schnell! Wenn wir jetzt durch den Wald gehen, gelten folgende Regeln:

Wir bleiben zusammen, keiner rennt allein weg.
Und keiner geht vom Weg ab.
Es ist gefährlich hier im Wald.
Ich möchte keinen von euch verlieren.
Habt ihr das verstanden?"

Abspielen

வகுப்பு மாணவர்களில் ஒரு சிலர் அப்பொழுது ஓட விரும்பினர்.

திருமதி போட கூப்பிடுகின்றார்: „அவசரப்பட வேண்டாம்! நாங்கள் இப்பொழுது காட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால், சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

நாங்கள் சேர்ந்து இருக்க வேண்டும். ஓருத்தரும் தனித்து ஓடக்கூடாது.
அத்துடன் ஒருத்தரும் பாதையிலிருந்து விலகக் கூடாது.
இந்தக் காடு மிகவும் ஆபத்தானது.
உங்களில் இருந்து யாரும் காணாமற் போவது எனக்கு விருப்பமில்லை.
உங்களுக்கு எல்லாம் விளங்கியதா?"

Abspielen

Als sie eine Weile gewandert sind, kommen sie an eine Stelle, wo viele Büsche stehen.

Bastian entdeckt es zuerst: „Himbeeren!" schreit er.

Die anderen sind schon bei den Büschen und stopfen sich den Mund mit Beeren voll.

„Fünf Minuten habt ihr Zeit", sagt Frau Bode.
Nach einer Weile ruft sie: "So, genug jetzt! Wir müssen weiter."

Abspielen

அவர்கள் கொஞ்சத் தூரம் நடந்து சென்றதும், பற்றைகள் நிறைந்த ஒரு இடத்திற்கு வந்து சேர்கின்றனர்.

பஸ்ரியானின் கண்களில் இவை முதலில் தென்பட்டன: „ஹிம்பெயாரென்
(புற்றுப்பழம்)“ எனக் கத்துகின்றான்.

மற்றவர்களும் பற்றைக்குள் சென்று ஹிம்பெயாரெனைப் பறித்து வாய் நிறையத் திணித்தனர்.

„உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன“, எனக் கூறுகின்றார் திருமதி போட.
சற்று நேரத்தில் அவர்களைக் கூப்பிடுகின்றார்: „இவ்வளவும் போதும்! நாங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.“

 
 

Abspielen

Als sie wieder unterwegs sind, sagt Tina zu Tim: "Schade, dass wir weiter mussten.
Die Beeren waren so lecker!“

 
 

Abspielen

அவர்கள் வழியில் சென்று கொண்டிருக்கும்போது, ரீனா ரிம்மிடம் கூறுகின்றாள்: "அநியாயம், நாங்கள் தொடர்ந்து செல்லவேண்டியுள்ளது. நல்ல சுவையான பெயாரென்(புற்றுப்பழம்)!"

Abspielen

Nach zehn Minuten kommen sie zur Ruine.

Erst steigen alle auf den Turm.

Tina und Tim probieren aus, wie lange ihre Spucke von der Turmspitze bis zum Waldboden braucht.

Als alle wieder unten sind, sagt Frau Bode: „Hier machen wir nun eine halbe Stunde Pause. Jetzt dürft ihr eure Brote auspacken. Aber bitte, bleibt hier. Dass mir keiner weggeht!"

Abspielen

பத்து நிமிடத்தில் அவர்கள் பாழடைந்த கட்டடத்தை வந்து அடைகிறார்கள்.

நாம் அனைவரும் முதலில் கோபுரத்தில் ஏறுவோம்.

ரீனாவும் ரிம்மும், அவர்கள் கோபுர உச்சியிலிருந்து துப்பும் உமிழ்நீர் காட்டுத்தரையை வந்தடைய எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

அனைவரும் மீண்டும் கீழே வந்தபின், திருமதி போட கூறுகின்றார்:
„இங்கே நாம் அரை மணித்தியாலம் ஓய்வு எடுப்போம். இப்பொழுது நீங்கள் உங்கள் பாணை எடுத்து சாப்பிடலாம். ஆனால் தயவு செய்து, அனைவரும் இங்கேயே இருக்கவும். ஓருத்தரும் வெளியே செல்ல வேண்டாம்!"

Abspielen

Tina guckt nach, was Mama ihr mitgegeben hat. „Oh, nein“,  stöhnt sie. „Käsebrot!“

„Magst du Käse?", fragt sie Tim.
„Ja, gern", antwortet Tim und lacht.
Tina fragt Tim: „Tauschen wir?"
„Ja, gern," sagt Tim und lacht noch mehr.
Dann zeigt er Tina sein Brot: Auch Käse!

„Ich hol mir einfach ein paar Himbeeren", sagt Tina.

„Das geht nicht", flüstert Tim. „Du hast doch gehört, was Frau Bode gesagt hat."

„Die merkt das gar nicht", flüstert Tina.
„Bis die Pause vorbei ist, bin ich längst wieder hier." Heimlich schleicht sie weg.

Abspielen

அம்மா தனக்கு என்ன மதிய உணவு தந்துவிட்டிருக்கிறார் என்று ரீனா பார்க்கிறாள். „ஓ, இதுவா", என்று சினக்கிறாள். "சீஸ்பாண்!"

அவள் ரிம்மிடம் கேட்கிறாள், "உனக்கு சீஸ் விருப்பமா?"
"ஆம், நல்ல விருப்பம்", எனக் கூறியபடி சிரிக்கிறான். „இருவரும் மாற்றுவோமா?“ என ரீனா ரிம்மிடம் கேட்கிறாள். „ஆம், நல்ல விருப்பம்", எனக் கூறியபடி உரத்து சிரிக்கிறான். பின் ரீனாவிடம் ரிம் தனது பாணைக் காட்டுகிறான்: அதுவும் சீஸ்தான்!

„நான் எனக்கு கொஞசம் ஹிம்பெயாரென்களை பறிக்கப் போகின்றேன்“, எனக் கூறுகிறாள் ரீனா.

„அது சரிவராது“,  "திருமதி போட என்ன கூறியவர் என்று, நீயும் தானே கேட்டாய்." என்று காதில் கிசுகிசுத்தான்.

„அவர் இதைக் கவனிக்கமாட்டார்“, என  ரீனாவும் கிசுகிசுத்தாள். „இடைவேளை முடிவதற்குள் நான் திரும்பி இங்கே வந்துவிடுவேன்.“ யாருக்கும் தெரியாமல் அவள் வெளியேறுகிறாள்.

Abspielen

Tim wartet.

Nach einiger Zeit fragt Frau Bode: „Sind eigentlich alle da?"

„Ja!" ruft Tim ganz schnell und ganz laut.

„Wir wollen lieber mal abzählen, ob auch wirklich alle 29 hier sind", sagt Frau Bode. „Wer fängt an?"

Abspielen

ரிம் காத்திருக்கின்றான்.

சற்று நேரத்தின் பின் திருமதி போட கேட்கின்றார்: „இப்பொழுது இங்கே அனைவரும் இருக்கிறீர்கள் தானே?

„ஆம்!“ என ரிம் மிக வேகமாகவும் உரத்த குரலிலும் கத்துகின்றான்.

"29 பேரும் உண்மையில் இங்கு இருக்கின்றீர்களா? என நாம் ஒரு தடவை எண்ணிப் பார்ப்பது நல்லது", என்று திருமதி போட கூறுகின்றார்.
„யார் தொடங்குவது?“

Abspielen

„Ich", sagt Elvira und ruft laut: „Eins!"

„Zwei!" ruft Bastian.
„Drei!" Das war Achim.
„Vier!" ruft Tim.
So geht es weiter.

„Hoffentlich kommt Tina bald", denkt Tim.
Sonst merkt Frau Bode, dass wir nur 28 sind."

„Achtundzwanzig!" ruft da schon Eva.

Einen Augenblick ist Stille. Da ruft Tim schnell: „Neunundzwanzig!"

„Gut. Dann sind wir ja vollzählig", sagt Frau Bode. Keiner hat gemerkt, dass Tim zweimal eine Zahl gerufen hat.

Abspielen

„நான்“, என்று எல்வீரா கூறிக்கொண்டு சத்தமாக சொல்லுகின்றாள்: "ஒன்று!"

„இரண்டு!“ கூறுகின்றான் பஸ்ரியான்.
"மூன்று!" என்றான்  அஃஹீம்.
„நான்கு!“ என்கின்றான் ரிம்.
இப்படியே தொடர்கிறது.

„நிச்சயமாக ரீனா விரைவில் வந்துவிடுவாள்“, என்று ரிம் நம்புகின்றான். அவள் வராவிடில் நாங்கள் 28 பேர் இருப்பதை திருமதி போட கண்டுபிடிப்பார்.

திடீரென „இருபத்தியெட்டு!“
என்கிறாள் ஏவா.

ஒரு நிமிடம் அமைதி நிலவுகிறது. அப்பொழுது ரிம் விரைவாக „இருபத்தியொன்பது!“
என்கிறான்.

„நல்லது, நாம் அனைவரும் இருக்கின்றோம்", என்கிறார் திருமதி போட. ரிம் இரண்டு தடவைகள் இலக்கம் சொன்னதை ஒருவரும் கவனிக்கவில்லை.

 

Abspielen

„Wir nehmen eine Abkürzung", sagt Frau Bode und marschiert voraus.

Tim geht sehr, sehr langsam und guckt sich immer wieder um.

Wo Tina nur bleibt?

 

Abspielen

„நாங்கள் குறுக்கு வழியால் செல்வோம்“, என்று திருமதி போட கூறியபடி அணிவகுத்து முன்னேறிச் செல்கின்றார்.

ரிம் மெல்ல மெல்ல சென்றபடி அடிக்கடி திரும்பிப் பார்க்கின்றான்.

ரீனா எங்கே இருக்கிறாள்?

Abspielen

Tina hat inzwischen ganz viele Himbeeren gegessen.
„Jetzt muss ich aber schnell zurück", sagt sie sich.

Aber als sie zur Ruine kommt,
sind alle schon weg.
„So ein Mist!" schimpft Tina."
Welchen Weg sind die wohl zurück?
Drei Wege führen von der Ruine weg.
Tina entscheidet sich für den linken.

Sie rennt, so schnell sie kann.
Wo sind nur die anderen?

Abspielen

இந்தநேரத்தில் ரீனா அதிகமான ஹிம்பெயாரென்களை உண்டாள்.

„இப்பொழுது நான் வேகமாகத் திரும்ப வேண்டும்“, என்று தனக்குத் தானே கூறுகின்றாள்.

ஆனால், அவள் பாழடைந்த கட்டடத்திற்கு வந்த வேளையில், அவர்கள் அனைவரும் புறப்பட்டு விட்டார்கள். „எல்லாம் பிழைத்து விட்டது!" என ரீனா திட்டுகின்றாள். "அவர்கள் எந்தப் பாதையால் சென்றிருக்கலாம்? அந்தப் பாழடைந்த கட்டடத்திலிருந்து மூன்று பாதைகள் செல்கின்றன. ரீனா இடப்பக்கமாக செல்ல முடிவெடுக்கின்றாள்.

அவளால் இயன்ற அளவுக்கு வேகமாக ஓடுகின்றாள். மற்றவர்கள் எங்கே இருக்கலாம்?

Abspielen

Tim bleibt schließlich stehen.
Was soll er nur machen?
Soll er Frau Bode sagen, dass Tina fehlt? Aber dann muss er ihr gestehen, dass er zweimal gerufen hat.

„Tim, du trödelst“, sagt Frau Bode. „Jetzt komm schon!" Tim geht langsam weiter.

 

Abspielen

இறுதியில் ரிம் நின்று விட்டான். அவனால் என்ன செய்ய முடியும்?
ரீனா இல்லாத விடயத்தை அவன் திருமதி போடவிற்கு கூற வேண்டுமா?
அப்படியென்றால் அவன் இரண்டு தடவைகள் இலக்கம் சொன்னதை அவரிடம் கூற வேண்டும்.

„ரிம், நீ இழுத்தடிக்கின்றாய்", என்கிறார் திருமதி போட.
„இப்பொழுது விரைந்து வா!“ ரிம் மெதுவாகவே செல்கின்றான்.

Abspielen

Tina rennt und rennt. Der Wald wird immer dichter.

Sie bleibt stehen und guckt sich um.

Irgendwo knackt ein Zweig. Es raschelt im Gebüsch.

Tina hält vor Angst den Atem an.

Ein Hase hoppelt aus dem Busch vor ihr.

Erleichtert rennt sie zurück zur Ruine.

Dort nimmt sie nun den mittleren Weg. Ob das jetzt der richtige ist?

Abspielen

ரீனா ஓடி ஓடிப் போகின்றாள். காடு இன்னும் அடர்த்தியாகின்றது.

அவள் அவ்விடத்தில் நின்றுகொண்டு சுற்றுமுற்றும் பார்க்கின்றாள்.

எங்கிருந்தோ ஒரு கிளை முறியும் சத்தம். பற்றைக்குள் இருந்து சரசர என்ற ஓசை ஒலிக்கிறது.
ரீனாவுக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருக்கிறது.
முயல் ஒன்று பற்றைக்குள்ளிருந்து அவளுக்கு முன்னால் பாய்ந்து ஓடுகிறது.
பயம் விலக மீண்டும் அவள் பாழடைந்த கட்டடத்தை நோக்கி ஓடுகிறாள்.
அங்கிருந்து அவள் நடுப்பாதை வழியால் ஓடுகின்றாள், அது சரியான வழியாக இருக்குமா?

Abspielen

Tim hält es nicht mehr aus. „Frau Bode, halt!“, ruft er. „Tina fehlt."

Und er erzählt, was er gemacht hat.

Frau Bode schimpft gar nicht, sie wird nur sehr, sehr aufgeregt.

„Schnell zurück! Ruft alle nach Tina!", befiehlt sie. „Wir müssen Tina finden."
Alle rufen, alle rennen zurück.

Aber Tina ist weder bei der Ruine, noch bei den Himbeeren und sie antwortet auch nicht.

„Mein Gott! Wie schrecklich!", sagt Frau Bode. Sie weint fast.

„Ich muss die Polizei verständigen, mir bleibt keine andere Wahl."

Abspielen

ரிம்மால் இதற்கு மேல் அடக்கி வைக்க முடியவில்லை. „நில்லுங்கள் திருமதி போட, இங்கு ரீனா இல்லை." என்கிறான்.

அத்துடன் அவன் நடந்தவற்றையெல்லாம் கூறுகின்றான்.
திருமதி போட திட்டவில்லை. அவர் மிகவும் பதற்றமாக இருக்கின்றார்.
„வேகமாக திரும்புங்கள்! அனைவரும் ரீனாவைக் கூப்பிடுங்கள்!“, எனக் கட்டளையிடுகிறார் அவர்.

„நாங்கள் ரீனாவை கண்டுபிடிக்க  வேண்டும்“. எல்லோரும் ரீனாவைக் கூப்பிட்டபடி திரும்பி ஓடுகின்றனர்.

ரீனா பாழடைந்த கட்டடத்திலும் இல்லை, ஹிம்பெயாரென் பறித்த இடத்திலும் இல்லை, அத்துடன் எதுவித பதிலும் இல்லை.
„என் கடவுளே! என்ன சோதனை!“, எனக் கூறுகின்றார் திருமதி போட. அவருக்கு அழுகையே வருகிறது.

„நான் காவல் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும், இதைத்தவிர வேறு வழியில்லை."

Abspielen

Frau Bode ruft: „Wir müssen schnell zum Bus. Dort liegt mein Handy.“

Alle Kinder rennen bis sie beim Bus ankommen.
Da sitzt Tina neben dem Fahrer!

„Tina!" schreit Frau Bode. „Tina, wo kommst du denn her?"

Abspielen

திருமதி போட கூறுகின்றார்: „நாம் வேகமாக பேருந்திற்குச் செல்ல வேண்டும். அதில் தான் எனது கைத்தொலைபேசி உள்ளது.“

பிள்ளைகள் அனைவரும் பேருந்து நிறுத்தப்பட்ட இடத்திற்கு ஓடியோடி வந்து சேருகின்றனர்.

அங்கே ரீனா  ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்திருக்கிறாள்!

„ரீனா!“ என்று கத்துகிறார் திருமதி போட. „ரீனா, எப்படி இங்கு வந்தாய்?"

Abspielen

Tina sagt kleinlaut: „Ich habe mich verlaufen. Frau Bode, es tut mir ja so leid. Ich habe große Angst gehabt."

„Meine Angst war noch viel größer", sagt Frau Bode.

„Aber meine war am größten!", sagt Tim.

Abspielen

ரீனா மெதுவாகக் கூறுகின்றாள்: „நான் பாதையை தவற விட்டுவிட்டேன், திருமதி போட, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்கு  பயமாக இருந்தது."

„எனக்கு பயம் இன்னும் அதிகமாக இருந்தது“, என்கிறார் திருமதி போட.

„எனக்குத் தான் மிகமிக  அதிகமாக இருந்தது!“, என்கிறான் ரிம்.

Abspielen

Ende

Abspielen

முற்றும்.

 

Gehe zu:

in Landscape-Ansicht drehen