Illustration: Kinder der Melanchthonschule Münster,
Christiane Finger und Krystyna Strozyk
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzer und Sprecher Tamil:
Subramaniam Paramananthan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0

 

Abspielen

Ein buntes Land

von Manfred Mai

 

Abspielen

பலவர்ண நாடு

Manfred Mai

Abspielen

Kokokaka war ein Land hinter den Bergen.
Dort lebten die Pumpus schon seit tausend Jahren.
Zu allen Zeiten gab es große und kleine, dicke und dünne, kluge und dumme Pumpus.
Doch so unterschiedlich sie auch waren, eines hatten alle Pumpus gemeinsam: ein blaues Fell.

Abspielen

மலைகளுக்குப் பின்னால் கோகோகாகா என்ற ஒரு நாடு இருந்தது.
அங்கே பும்புக்கள் பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வந்தன.
அவற்றின் தோல்கள் நீல நிறமாக இருந்தன.
எப்போதும் பெரிய, சிறிய, மெல்லிய, மொத்தமான, அறிவுள்ள, அறிவில்லாத பும்புக்கள் வாழ்ந்து வந்தன. வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. அதுவே அவைகளின் நீலத் தோல்.

 


 

Abspielen

Bis eines Tages das erste Pumpu mit einem roten Fell geboren wurde.

 


 

Abspielen

ஒரு நாள் ஒரு சிவப்பு பும்பு பிறந்தது.

Abspielen

Seine Eltern erschraken sehr, als sie ihr rotes Kind sahen. Sie wuschen und schrubbten es immer wieder, aber das Fell ihres Kindes blieb rot. „Ich habe es trotzdem lieb“, sagte die Mutter. Der Vater nickte. „Hauptsache, es ist gesund und wird glücklich.“
Gesund wurde das rote Pumpu, aber richtig glücklich nicht. Denn obwohl seine Eltern es lieb hatten und die meisten Pumpus nett zu ihm waren, spürte das rote Pumpu, dass es anders war. Und manchmal war es deswegen traurig.

Abspielen

சிவப்பு நிறமான பிள்ளையைப் பார்த்ததும் அதன் பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் அந்தப்பிள்ளையைத் திரும்பத் திரும்ப தேய்த்து கழுவிப்பார்த்தும் அந்தப் பிள்ளையின் தோல் சிவப்பு

நிறமாகவே இருந்தது. „எப்படி இருந்தாலும் அந்தப் பிள்ளை என் பிள்ளை தானே“ என்று தாய் சொன்னாள். தந்தை தலையை அசைத்துக் கொண்டே„நோய் நொடி இல்லாமல் இருந்தால் போதும் தானே“ என்று சொன்னார்.
சிவத்தப் பும்பு நோய் நொடி இல்லாமல் வளர்ந்தது. ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. பெற்றோர்கள் அதன்மேல் அன்பாக இருந்தாலும், பெரும்பாலான பும்புக்கள் அதனுடன் நன்றாகப் பழகினாலும் கூட தான் மற்றவர்களைவிட வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்து கொண்டது. அதனால் சில சமயங்களில் அது கவலையாய் இருந்தது.

Abspielen

Eines Morgens sagte es zu seinen Eltern: „Ich gehe fort und suche so lange, bis ich rote Pumpus finde.“

Die Eltern erschraken wie damals, als sie ihr Kind zum ersten Mal sahen.
„Du brauchst nicht fortzugehen‟, entgegnete der Vater. „Es gibt keine roten Pumpus.“

„Ich bin doch auch rot.“
„Aber du bist die Ausnahme.“
„Vielleicht gibt es noch mehr Ausnahmen“, sagte das rote Pumpu. „Und die will ich finden.“

Es ließ sich von den Eltern weder umstimmen noch zurückhalten und machte sich auf den Weg.

Abspielen

ஒரு நாள் காலை “என்னைப்போல ஒரு சிவப்பு பும்புவை கண்டுபிடிக்கும் வரை நான்
தேடப்போகிறேன்“ என்று தனது பெற்றோர்களுக்குச் சொன்னது.

பெற்றோர்கள் சிவத்த பும்புவை முதற்தடவையாகக் கண்டபோது எப்படி அதிர்ச்சியடைந்தார்களோ அதேபோன்று இப்போதும் அதிர்ச்சியடைந்தார்கள். „சிவப்பு நிறமான பும்பு ஒன்றும் இல்லை. எனவே இப்போது நீ போகத் தேவையில்லை“ என்று எதிர்த்தார் தந்தை.

„நான் சிவப்பு நிறம் தானே“ என்றது சிவப்பு பும்பு.
„ஆனால் நீ அதற்கு விதிவிலக்கு" என்றார் தந்தை.
„சிலவேளை என்னைப் போல வேறு விதிவிலக்கானவர்களும் இருக்கலாம். "அவர்களை தான் நான் கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று சிவப்பு பும்பு சொன்னது.

பெற்றோருடைய விருப்பத்தையும் மீறி அது சென்றுவிட்டது.

Abspielen

Aber im ganzen Kokokakaland fand es kein einziges rotes Pumpu.
Enttäuscht und traurig
machte es sich auf den Heimweg.

Seine Eltern waren sehr froh,
als ihr Kind wieder vor ihnen stand.
Und auch die meisten anderen Pumpus
freuten sich, dass das rote Pumpu
wieder zu Hause war.

Abspielen

ஆனால் கோகோகாகா நாடு முழவதிலும் ஒரு சிவப்பு பும்புவையும் காணமுடியவில்லை.
ஏமாற்றம் அடைந்த பும்பு கவலையோடு தனது வீடு திரும்பியது.

தங்களுடைய பிள்ளையைக் கண்டு பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
சிவப்பு பும்பு வீட்டுக்குத் திரும்பி வந்ததனால் மற்றைய பும்புக்களும் சந்தோஷப்பட்டன.

Abspielen

„Wenn ich ehrlich sein soll“, sagte ein dickes Pumpu, „das Rote hat mir gefehlt.“
„Mir auch“, sagte sein dünner Freund. „Ich finde es nämlich schön, dass es nicht nur blaue Pumpus gibt, sondern auch ein rotes.“
„Ich möchte auch gern eine andere Farbe haben‟, nuschelte ein kleines Pumpu, schloss die Augen und dachte an das leuchtende Gelb der Dotterblumen beim Bach.
„Ich wünsche mir schon lange ein grünes Fell‟, gab ein großes Pumpu zu. „Nur habe ich mich bisher nie getraut das zu sagen.‟

Abspielen

„உண்மையைச் சொல்வதானால், நான் சிவப்பு பும்புவின் நினைப்பாகவே இருந்தேன்“ என்று ஒரு மொத்தமான பும்பு சொல்லியது.

„எனக்கும் தான்“ என்று அதனுடைய மெல்லிய சினேகிதன் சொன்னான். „நீலப் பும்புக்கள் மாத்திரம் இருப்பதைவிட ஒருசிவப்பு பும்பு இருப்பதும் அழகானது என கருதுகின்றேன்.“
„இன்னொரு நிறத்தில் இருப்பது எனக்கும் விருப்பம் தான்“ என்று சிறிய பும்பு முணுமுணுத்தபடி கண்ணைமூடிக்கொண்டு ஆற்றிலுள்ள பூக்களின் மஞ்சள் ஒளியை எண்ணிப் பார்த்தது.
„பச்சைத்தோல் இருக்கவேண்டு மென்று எனக்கு நீண்ட நாள் ஆசை“ என்று பெரிய பும்புவும் சொல்லியது.

Abspielen

Das große Pumpu füllte einen Bottich mit Wasser, sammelte verschiedene Kräuter und warf sie hinein. Bald färbte sich das Wasser grün und das große Pumpu stieg in den Bottich. Vorsichtig drehte und wendete es sich; mal war der Po mit dem Schwanz unter Wasser, mal der Kopf mit dem Rüssel. Und es dauerte nicht lange bis ein grünes Pumpu aus dem Bottich stieg.

Es schaute an sich hinunter und strahlte. „Also ich weiß nicht“, murmelte ein altes Pumpu, „wir Pumpus waren immer blau. Und ich meine,
das sollten wir auch bleiben.“

„Du kannst ja blau bleiben‟, erwiderte das grüne Pumpu. „Aber mir gefällt mein grünes Fell besser als mein blaues.‟

Abspielen

பெரிய பும்பு ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பியது. பலவிதமான மூலிகைகளைப் பிடுங்கி அந்தத் தண்ணீருக்குள் போட்டது. சிறிது நேரத்தில் அந்த தண்ணீர் பச்சைநிறமானதும் பெரிய பும்பு அந்த வாளிக்குள் இறங்கியது. கவனமாகத் தண்ணீருக்குள் மேலும் கீழுமாக புரண்டு எழும்பியது. சிலசமயம் தலையும் தும்பிக்கையும் தண்ணீருக்குள்ளேயும், சிலசமயம் பின்பக்கமும் வாலும் தண்ணீருக்குள்ளேயுமாக மாறிமாறித் திரும்பியது. சிறிது நேரங்கூட ஆகவில்லை அந்த வாளியிலிருந்து ஒரு பச்சைப் பும்பு இறங்கியது. அது தன்னைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தது.

ஒரு வயதான பும்பு எனக்கென்றால் தெரியவில்லை, நாங்கள் எப்போதும் நீல நிறமானவர்கள். நாங்கள் எப்போதும் அப்படியே இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்“ என்று தனக்குள் முணுமுணுத்தது.

„ஆம் நீ நீலத் தோலாக இருந்து கொள்.ஆனால் நான் நீலத் தோலாக இருப்பதை விட பச்சைத் தோலாக இருப்பதையே விரும்புகிறேன்.“

Abspielen

Auch andere färbten in den nächsten Wochen ihr Fell und bald gab es Pumpus in vielen Farben. Das Kokokakaland war bunter als je zuvor.

Die meisten Pumpus fanden das viel schöner als das eintönige Blau - sogar einige von denen, die ihr blaues Fell lieber behalten wollten.

Zwischen den vielen farbigen Pumpus fühlte sich das rote Pumpu endlich wohl und war nun sehr glücklich.

Abspielen

மற்றவர்களும் சில வாரங்களில் தங்கள் தோல்களின் நிறங்களை மாற்றிக்கொண்டார்கள். இதனால் மிக விரைவில் பும்புக்கள் விதம்விதமான நிறங்களாக மாறியிருந்தன. கோகோகாகா நாடு பலவித நிறங்களைக் கொண்ட நாடாக மாறியது.

பெரும்பாலான பும்புக்கள் தனி நீல நிறத்தைவிட பலவித நிறங்களைத்தான் விரும்பின. இவைகளுள் முன்னர் நீலநிறத்தை விரும்பியிருந்தவைகளும் இருந்தன.

பல நிறங்களைக் கொண்ட பும்புக்களுடன் அந்த சிவப்பு பும்பு பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.

 


Ende


முற்றும்

Gehe zu:

in Landscape-Ansicht drehen