Illustration: Julius Thesing
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzerin Tamil: Radha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0
von Achim Bröger
எழுதியவர்: அஃஹிம் புரோய்கர்
„Hast du eben Herrn Felix und Herrn Konrad gesehen?“, fragt der Mann mit Regenschirm die Frau mit Dackel. „Ich glaube, die haben sich nicht gegrüßt.“
„Nicht gegrüßt“, murmelt die Frau mit Dackel.
„சற்று முன்பாக நீ திரு பீலிக்ஸையும் திரு கொன்றாட்டையும் பார்த்தாயா?“ என குடையுடன் வந்த ஒருவன் குள்ள நாயுடன் வந்த ஒரு பெண்ணிடம் கேட்கின்றான். „அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்ளவில்லை, என்று நான் நினைக்கிறேன்.“
„வணக்கம் தெரிவித்துக் கொள்ளவில்லை“, என முணுமுணுக்கின்றாள் குள்ள நாயுடன் வந்த பெண்.
Kopfschüttelnd geht sie weiter, trifft an der nächsten Ecke den dicken Mann. „Stell dir vor“, sagt sie zu ihm, „nicht mal gegrüßt haben sich der Herr Felix und der Herr Konrad. Und böse angesehen haben sie sich auch.“
„Nicht gegrüßt und böse angesehen“, wiederholt der dicke Mann schnaufend.
தலையை ஆட்டியவண்ணம் அவள் தொடர்ந்து சென்று, அடுத்த மூலையில் ஒரு மொத்த மனிதனைச் சந்திக்கின்றாள். „ஓரு தடவை யோசித்துப்பார்“ என்னவென்றால் திரு பீலிக்ஸ்உம் திரு கொன்றாட்டும் தங்களுக்குள் வணக்கம் தெரிவித்துக்கொள்ளவில்லையாம்.
அத்துடன் அவர்கள் இருவரும் முறைத்துப் பார்த்தார்களாம்,“ என அவனிடம் கூறுகின்றாள்.“
„வணக்கம் தெரிவித்துக் கொள்ளவில்லை அத்துடன் முறைத்துப் பார்த்தார்கள்“, என பெருமூச்சு விட்டபடி மீண்டும் கூறுகின்றான்.
Dann geht er weiter, trifft an der nächsten Ecke den wichtigen Mann mit Aktentasche. „Guten Tag, wichtiger Mann mit Aktentasche“, grüßt er. „Weißt Du schon das Neueste?
Der Herr Felix und der Herr Konrad haben sich nicht gegrüßt. Bitterböse angesehen haben sie sich, außerdem sind sie wütend aneinander vorbeigegangen.“
„Nicht gegrüßt, bitterböse angesehen und wütend aneinander vorbeigegangen“, wiederholt der wichtige Mann mit Aktentasche.
தொடர்ந்து சென்ற அவன் அடுத்த மூலையில் கோப்புப் பையுடன் இருக்கும் முக்கிய மனிதனைச் சந்திக்கின்றான். „கோப்புப் பையுடன் இருக்கும் முக்கிய மனிதனே, வணக்கம்!“ எனக் கூறுகின்றான்.
„உனக்குப் புதினம் தெரியுமா? திரு பீலிக்ஸ்உம் திரு கொன்றாட்டும் தங்களுக்குள் வணக்கம் தெரிவித்துக் கொள்ளவில்லையாம். இருவரும் முறைத்துப் பார்த்தார்களாம், அத்துடன் கோபித்துக்கொண்டு விலகிச் சென்றுவிட்டார்களாம்.“
„வணக்கம் தெரிவித்துக் கொள்ளவில்லை, முறைத்துப் பார்த்ததுடன் மட்டுமில்லாமல் கோபித்துக் கொண்டு விலகிச் சென்று விட்டார்கள்", என கோப்புப்பை வைத்திருந்த முக்கிய மனிதன் மீண்டும் கூறுகின்றான்.
Dann geht er weiter, trifft an der nächsten Ecke den lustigen Mann und sagt: „Der Herr Felix und der Herr Konrad machen mir Sorgen.
Die grüßen sich nicht mehr.
Dafür sehen sie sich bitterböse an und drohen sich mit der Faust. Und der eine soll den anderen gestoßen haben, bestimmt sogar umgestoßen, so wütend sind sie aufeinander.
தொடர்ந்து சென்ற அவன், அடுத்த மூலையில் ஒரு வேடிக்கை மனிதனைச் சந்தித்துக் கூறுகின்றான்: „திரு பீலிக்ஸையும் திரு கொன்றாட்டையும் நினைத்தால் எனக்குக் கவலையாக உள்ளது. இருவரும் வணக்கம் தெரிவித்துக் கொள்வதேயில்லையாம்.
அதனால் இருவரும் முறைத்துப் பார்ப்பதுடன் கை முட்டியால் அச்சுறுத்துகிறார்களாம். அதைவிட ஒருவர் மற்றவரை தள்ளிவிட்டிருக்கிறாராம், அநேகமாக தள்ளி விழுத்தியிருக்க வேண்டும். அந்தளவிற்கு இருவரும் கடும் கோபமாக இருக்கிறார்களாம்.
Sicher hat der Herr Felix den Herrn Konrad umgestoßen, denn der Herr Felix ist stärker.“
„Nicht gegrüßt, bitterböse angesehen, mit der Faust gedroht und umgestoßen“, wiederholt der lustige Mann.
திரு பீலிக்ஸ் பலசாலி என்பதனால் நிச்சயமாக அவர்தான் திரு கொன்றாட்டை தள்ளி விழுத்தியிருப்பார்.“
„வணக்கம் தெரிவித்துக் கொள்ளவில்லை, முறைத்துப் பார்த்திருக்கிறார்கள், கைமுட்டியால் அச்சுறுத்தியிருக்கிறார்கள், அத்துடன் மோதுப்பட்டிருக்கிறார்கள்", என வேடிக்கை மனிதன் மீண்டும் கூறுகின்றான்.
Dann geht er weiter, trifft an der nächsten Ecke die kleine Frau mit Blümchenhut. „Hallo“, sagt er zu ihr, „toller Hut, das Ding auf deinem Kopf.
Aber stell dir vor, der Herr Felix hat den armen Herrn Konrad nicht gegrüßt und bitterböse angesehen.
தொடர்ந்து சென்ற அவன் அடுத்த மூலையில் பூத்தொப்பியணிந்த ஒரு சிறிய பெண்ணைச் சந்திக்கின்றான்.
„வணக்கம்! மிக அழகான தொப்பி அணிந்திருக்கிறாய்,“ என்று அவளுக்குக் கூறுகின்றான். „இருந்தாலும் நான் கூறுவதை ஒருதடவை யோசித்துப்பார், திரு பீலிக்ஸ் அப்பாவியான திரு கொன்றாட்டிற்கு வணக்கம் கூறவில்லையாம், அத்துடன் முறைத்துப் பார்த்தார்களாம்.
Mit der Faust hat er ihm gedroht. Auf die Straße geworfen hat er ihn auch, dass er beinahe überfahren worden wäre. Wenn das die Frau Konrad erfährt, die wird es dem Herrn Felix aber geben.“
„Nicht gegrüßt, bitterböse angesehen, mit der Faust gedroht, umgeworfen, fast überfahren worden. Zum Glück wird die Frau Konrad ihrem Mann helfen“, sagt die kleine Frau mit Blümchenhut.
திரு பீலிக்ஸ் அவரை கைமுட்டியால் அச்சுறுத்தினாராம்.
அதுமட்டுமில்லை அவரைத் தூக்கி வீதியில் எறிந்திருக்கிறாராம், இதனால் மோதி அடிபட்டிருப்பார். திருமதி கொன்றாட் இதைக் கேள்விப்பட்டால், அவர் திரு பீலிக்ஸை பழிவாங்குவார்.“
„வணக்கம் தெரிவிக்கவில்லை, முறைத்துப் பார்த்திருக்கிறார், கைமுட்டியால் அச்சுறுத்தியிருக்கிறார், அடிபடுமளவுக்கு தூக்கி எறியப் பட்டிருக்கிறார். நல்லகாலம் திருமதி கொன்றாட் அவளது கணவனுக்கு உதவி செய்வார்", எனப் பூத்தொப்பியணிந்த பெண் கூறுகின்றாள்.
Dann geht sie weiter, trifft an der nächsten Ecke den humpelnden Mann. „Wie geht's?“ fragt sie.
„Schlecht“, sagt er.
„Aber dem Herrn Konrad geht’s schlechter“, sagt die Frau mit Blümchenhut. „Herr Felix, dieser Rohling, hat ihn nicht gegrüßt, bitterböse angesehen, mit der Faust umgestoßen und vor ein Auto gerollt. Der sieht jetzt aus! Dicke Beule am Kopf, blaues Auge, ganz schlimm.
தொடர்ந்து சென்ற அவள் அடுத்த மூலையில் இருந்த நொண்டி மனிதனைச் சந்திக்கின்றாள். „நலமாக இருக்கிறீர்களா?“ என அவள் கேட்கின்றாள்.
„நலமில்லை", என்கிறான் அவன்.
„ஆனால் இதைவிட திரு கொன்றாட்டின் நிலை மோசமாகவிருக்கிறது", என பூத்தொப்பியணிந்த பெண் கூறுகின்றாள். „நடத்தைகெட்ட திரு பீலிக்ஸ் அவருக்கு வணக்கம் தெரிவிக்கவில்லையாம், முறைத்துப் பார்த்தாராம், கைமுட்டியால் குத்தினாராம் அத்துடன் ஒரு சிற்றுந்துக்குக் கீழே தூக்கியெறிந்திருக்கிறாராம். இப்பொழுது அவரின் நிலை! தலையில் வீக்கக்கட்டி, நீலம்பாரித்த கண், கவலைக்கிடமாக இருக்கிறார்.
Zum Glück ist die Frau Konrad kräftig, die wird's dem Herrn Felix ordentlich geben. Erst vorhin habe ich sie im Laden gesehen. Sie hat Konservendosen eingekauft.“
„Nicht gegrüßt, bitterböse angesehen, mit der Faust aufs Auge gehauen, vor das Schienbein getreten.
நல்ல காலம் திருமதி கொன்றாட் தைரியமானவர் என்பதால் அவர் நல்ல முறையில் பதிலடி கொடுப்பார். இப்பொழுதுதான் நான் அவரைக் கடையில் பார்த்தேன். அவர் தகரடப்பா உணவுகளை வாங்கிக் கொண்டிருந்தார்.“
„வணக்கம் தெரிவிக்கவில்லை, முறைத்துப் பார்த்திருக்கிறார், கைமுட்டியால் கண்ணில் அறைந்திருக்கிறார், கீழ்க்கால் முன்னெலும்பில் காலால் அடித்திருக்கிறார்.
Durchhauen wird die Frau Konrad den Herrn Felix dafür“, sagt der humpelnde Mann und humpelt weiter, trifft an der nächsten Ecke den Mann mit Glatze.
„Schon gehört?“ fragt er ihn. „Der Felix, der Lumpenkerl, hat den armen Herrn Konrad nicht gegrüßt, bitterböse angesehen, mit der Faust aufs Auge gehauen, vor das Schienbein getreten, auf die Straße geworfen, dass er beinahe unter ein Auto gerollt wäre. Dicke Beule, blaues Auge, alles ganz schlimm.
அதற்காக திருமதி கொன்றாட் திரு பீலிக்ஸிற்கு நல்ல அடி கொடுக்கப் போகின்றார், எனக் கூறிக்கொண்டு சென்ற நொண்டி மனிதன் அடுத்த மூலையில் மொட்டை மனிதனைச் சந்திக்கிறான்.
„கேள்விப்பட்டாயா?“ என அவனிடம் கேட்டான். „பீலிக்ஸ் என்ற உதவாக்கரை அப்பாவியான திரு கொன்றாட்டிற்கு வணக்கம் தெரிவிக்கவில்லையாம், முறைத்துப் பார்த்தாராம், கைமுட்டியால் கண்ணில் அறைந்தாராம், கீழ்க்கால் முன்னெலும்பில் அடித்தாராம், வீதியில் தூக்கி எறிந்தாராம், சுழன்றுபோய் அருகில் வந்த சிற்றுந்திற்கு அடியில் விழுந்திருக்கிறார் போலிருக்கிறது. வீக்கக்கட்டி, நீலம்பாரித்த கண், கவலைக்கிடமான நிலை.
Aber dann kam die kräftige Frau Konrad. Die hat es dem Herrn Felix gezeigt. Geschimpft, auf den Zeh gestiegen, eine Dose Bohnen an den Kopf geworfen.
Und die Konradkinder waren auch dabei. Die Felixkinder und die Felixfrau sind hergerannt. Tolle Keilerei! Polizei- und Krankenwagen kamen, Feuerwehr fehlte auch nicht, und die hat alles nass gespritzt.“
ஆனால் அந்தநேரம் பலசாலியான திருமதி கொன்றாட் வந்துவிட்டாராம். வந்தவர் தனது பலத்தை திரு பீலிக்ஸிற்கு காட்டினாராம். திட்டினாராம், காலில் உழக்கினாராம். போஞ்சி டப்பாவை தலையில் எறிந்தாராம்.
அத்துடன் கொன்றாட்டின் பிள்ளைகளும் அருகில் இருந்தார்களாம். பீலிக்ஸின் பிள்ளைகளும் மனைவியும் அவ்விடத்திற்கு ஓடி வந்தார்களாம். பெரிய கலவரம்! காவற்துறையினரும் நோயாளர் வாகனமும் குறையில்லாமல் தீயணைப்புப் படையினரும் வந்து நனையுமளவிற்கு தண்ணீரை விசிறி அடித்தார்களாம்.“
„Nicht gegrüßt, bitterböse angesehen, mit der Faust aufs Auge geschlagen, gegen das Schienbein getreten, unter ein Auto gerollt. Dicke Beule, blaues Auge. Tolle Familienkeilerei mit Polizei und Krankenwagen.
Zum Glück ist dann die Feuerwehr gekommen, und jetzt sind alle nass“, wiederholt der Mann mit Glatze und murmelt: „Da können einem ja die Haare zu Berge stehen.“
„வணக்கம் தெரிவிக்கவில்லை, முறைத்துப் பார்த்தார், கைமுட்டியால் கண்ணில் அறைந்தார், கீழ்க்கால் முன்னெலும்பில் பலமாக அடித்தார், திரு கொன்றாட்டை சிற்றுந்துக்குக் கீழே சுழற்றி எறிந்தார். வீக்கக்கட்டி, நீலம்பாரித்த கண். காவற்துறையினரும் நோயாளர் வாகனமும் வருமளவுக்கு நல்ல குடும்பச்சண்டை.
நல்லகாலம் தீயணைப்புப் படையும் வந்துவிட்டது, அத்துடன் எல்லோரும் நனைந்திருக்கிறார்கள்", என மொட்டை மனிதன் திரும்பத் திரும்பக் கூறி முணுமுணுக்கின்றான். „பேரதிர்ச்சியாக இருக்கிறது.“
Dann geht er weiter, trifft an der nächsten Ecke… den armen Herrn Konrad. „Ooooch... das tut mir aber furchtbar leid“, sagt der dicke Mann mit Glatze. „Wie geht's denn?“
„Sehr gut, aber ich habe leider keine Zeit. Ich treffe nämlich meinen Freund, den Herrn Felix. Wir wollen zusammen ein Bier trinken.“
தொடர்ந்து சென்ற அவன், அடுத்த மூலையில் அப்பாவியான திரு கொன்றாட்டை சந்திக்கின்றான். „ஓ……… மிகவும் வருந்தத்தக்க செயல்", என அந்த மொத்த மொட்டை மனிதன் கூறுகின்றான். இப்பொழுது நலமாக இருக்கிறீர்களா?
„நலமாக உள்ளேன், ஆனால் இப்பொழுது எனக்கு நேரமில்லை. சற்று நேரத்தில் எனது நண்பன் பீலிக்ஸை சந்திக்கப் போகின்றேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பியர் குடிக்கப் போகின்றோம்.“
„Das versteh ich nicht“, wundert sich der Mann mit Glatze.
„Der Herr Konrad hinkt nicht, der ist nicht nass. Der sieht aus und tut so, als wäre ihm gar nichts passiert. Das versteh ich wirklich nicht“, wundert er sich nochmal.
„எனக்கு ஒன்றும் விளங்கவில்லை", என மொட்டைமனிதன் வியப்படைந்தான். „திரு கொன்றாட் நொண்டவுமில்லை, அத்துடன் ஈரமாகவுமில்லை. அவரைப் பார்க்கும் போது, அவருக்கு ஒன்றும் நடக்காததைப் போல் தெரிகிறது. உண்மையாகவே எனக்கு ஒன்றும் விளங்கவில்லை", என மீண்டும் அவன் ஆச்சரியமடைகின்றான்.