Illustration: Julius Thesing
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzerin Tamil: Radha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0
von Antje Damm
எழுத்தாளர்: அன்ற்யெ டம்
Das ist Ida. Ida hat einen Stoffbären, den nennt sie Essi.
இவள் தான் ஈடா. ஈடா எஸ்சி என அழைக்கப்படும் கரடிப் பொம்மை ஒன்றை வைத்திருக்கின்றாள்.
Ida isst morgens ein Brot mit Himbeermarmelade und trinkt eine Tasse Kakao.
Die fällt um.
Dann schimpft Mama und sagt: „So eine Sauerei, kannst du nicht aufpassen, Ida?”
Ida sagt: „Essi war's!“
Essi sagt nichts, denn Essi kann gar nichts sagen. Essi ist ja ein Stoffbär.
Aber Essi darf nicht mehr mit am Frühstückstisch sitzen.
ஈடா காலையில் ஒரு துண்டு பாண் ஹிம்பெயார் யாமுடன் (புற்றுப்பழப்பாகு) சாப்பிடுவாள், அத்துடன் ஒரு குவளை கொக்கோப் பாலும் குடிப்பாள்.
அது கீழே விழுகின்றது.
அதற்கு அம்மா திட்டியபடி கூறுகின்றாள்: „இப்படியா ஈடா அழுக்காக்குவது, உன்னால் கவனமாக இருக்க முடியாதா?“
ஈடா கூறுகின்றாள்: „அது எஸ்சியின் வேலை!“ ஆனால் எஸ்சி அதை கூறவில்லை, ஏனென்றால் எஸ்சியால் கதைக்கவே முடியாது. ஆம், எஸ்சி ஒரு கரடிப்பொம்மை.
அப்படியென்றால் இனிமேல் எஸ்சி காலைச்சாப்பாட்டுக்கு மேசைக்கு வரக் கூடாது.
Mama geht mit Ida spazieren.
„Wir können ja Kastanien sammeln“, schlägt sie vor.
Es ist bitterkalt draußen.
Aber Ida möchte heute keine Mütze anziehen, denn sie hat zwei Zöpfe.
Mama sammelt die Mütze aus der Pfütze.
„Essi war's!“, ruft Ida.
Also bekommt Essi auch eine Mütze.
அம்மா ஈடாவுடன் நடக்கச் செல்கின்றார். „நாங்கள் கஸ்ரானியன்விதை சேகரிப்போம்“, எனப் பரிந்துரைக்கின்றாள் அவள்.
வெளியில் கடுங்குளிர்.
இன்று ஈடா முடியை இரண்டாகக் கட்டியிருப்பதால், அவளுக்கு தொப்பி அணிய விருப்பமில்லை.
அம்மா தொப்பியை சேற்றுக் கிடங்கிலிருந்து எடுக்கின்றார்.
„அது எஸ்சியின் வேலை!“ எனக் கத்துகின்றாள் ஈடா.
அப்படியென்றால் இனி எஸ்சியும்; தொப்பி அணியவேண்டும்.
Mama kauft Würstchen für das Mittagessen ein.
Ida findet Einkaufen lustig.
Sie kauft auch etwas ein.
Aber Mama will keine Gummibärchen, kein Eis, keine Schokolade und vor allem keine Zuckermäuse.
Da ruft Ida ganz laut: „Essi war's.“
Und weil Ida das so laut sagt, schenkt die Verkäuferin ihr zwei Bonbons.
Essi kriegt keins!
அம்மா மதிய உணவுக்காக வூஸ்ற் (இறைச்சியுணவு) வாங்குகின்றார்.
ஈடாவுக்கு கடையில் பொருட்கள் வாங்க விருப்பம். அவளும் கொஞ்சம் வாங்குகின்றாள்.
ஆனால் அம்மாவுக்கு ஜெலிக்கரடி இனிப்போ ஐஸ்கிறீமோ சொக்கிலேற்றோ எலிவடிவ இனிப்புகளோ வாங்கப் பிடிக்காது.
அப்பொழுது ஈடா உரத்துக் கத்துகின்றாள்: „அது எஸ்சியின் வேலை.“
அவள் பெண்விற்பனையாளரிடம் இருந்து இரண்டு இனிப்புகளைப் பெறுவதற்காகவே அவ்வாறு கத்துகின்றாள்.
எஸ்சிக்கு கிடைக்கவில்லை!
Dann macht Ida ein Mittagsschläfchen, dabei ist sie gar nicht müde.
Sie hat viel mehr Lust auf was Anderes.
Mama mag aber keine großen Bilder, vor allem nicht auf dem Teppich.
„Essi war's!“, sagt Ida und bekommt von Mama ein Buch mit weißen Seiten geschenkt.
„Da kann Essi jetzt aber schön malen“, sagt Ida.
அவள் களைப்பாக இல்லை, ஆயினும் பகல் நித்திரை கொள்ளுகின்றாள்.
பல்வேறு விடயங்களில் அவளுக்கு அதிக ஆர்வம் உண்டு.
அம்மாவுக்கு பெரிய படங்கள் என்றால் பிடிக்காது, அவை நிலவிரிப்பின் மேல் இருந்தால் இன்னும் பிடிக்காது.
„அது எஸ்சியின் வேலை!“, என ஈடா கூறுகின்றாள், அத்துடன் அவளுக்கு வெண்ணிறப் பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்று அம்மாவிடம் இருந்து அன்பளிப்பாகக் கிடைக்கின்றது.
„எஸ்சி இப்பொழுது இதில் அழகாக வரையலாம்““, என்று கூறுகிறாள் ஈடா.
Nachmittags spielt Ida mit Ben.
Ben baut einen hohen Turm aus Bauklötzen.
Aber Ida will lieber mit den Puppen spielen.
Als Ben weint, ruft Ida: „Essi war's!“
Essi segelt durchs Kinderzimmer und darf nicht mehr mitspielen.
மாலை ஈடா பென்னுடன் விளையாடுகின்றாள்.
பென் பலகைத் துண்டுகளைக் கொண்டு உயரமான கோபுரம் ஒன்றைக் கட்டுகின்றான்.
ஆனால் ஈடாவுக்கு பொம்மைகளுடன் விளையாடுவதில் தான் நாட்டமாக இருக்கிறது.
பென் அழும்போதும் ஈடா கூறுகின்றாள்: „அது எஸ்சியின் வேலை!“
ஈடா எஸ்சியை சிறுவர் அறைக்குள் வேகமாக வீசி எறிகின்றாள். இனி சேர்ந்து விளையாட முடியாது.
Da kommt Mama ins Kinderzimmer und sagt: „Ich glaube, Essi muss mal ein bisschen schlafen, dann kann er auch nicht so viel anstellen.“
Da nickt Ida und steckt Essi ins Bett.
Endlich ist Ruhe und nichts passiert.
அப்பொழுது சிறுவர் அறைக்குள் அம்மா வந்து கூறுகின்றாள்: “எஸ்சி சற்று நேரம் படுக்கட்டும், அப்பொழுது அதன் குழப்படி கொஞ்சம் குறையும் என்று நான் நினைக்கின்றேன்.
தலையை ஆட்டியபடி அவள் எஸ்சியை கட்டிலில் வளர்த்துகின்றாள்.
இப்பொழுது ஒன்றும் நடக்காமல் அமைதியாக இருக்கிறது.
Abends putzt sich Ida die Zähne und wäscht sich die Hände.
Essi ist ja ganz weiß.
Papa sagt: „Die gute Creme! Da wird Mama aber schimpfen.“
Ida sagt: „Essi war's!“, und schimpft Essi tüchtig aus.
Dann muss Essi auch noch baden.
அன்று இரவு ஈடா தனது பற்களைத் தீட்டி கைகளையும் கழுவுகின்றாள்.
இப்பொழுது எஸ்சி நல்ல வெள்ளை நிறமாக இருக்கிறது.
அப்பா கூறுகின்றார்: „இது நல்ல கிறீம், இப்பொழுது அம்மாவிடம் திட்டு வாங்கப் போகின்றாய்…
ஈடா கூறுகின்றாள்: „அது எஸ்சியின் வேலை!“ அத்துடன் நல்லவேலை ஆ.. என்று எஸ்சியைத் திட்டுகின்றாள்.
இனி எஸ்சியும் குளிக்க வேண்டும்.
Jetzt ist Essi ganz nass und muss in ein Badetuch gewickelt werden, weil er doch mit Ida ins Bett will.
Zum Glück schaut sein Kopf noch raus, sodass er was sehen kann.
இப்பொழுது எஸ்சி நன்றாக நனைந்து இருப்பதால், அதை ஒரு துவாயில் சுற்ற வேண்டியுள்ளது. ஏனென்றால் ஈடாவுக்கு அதையும் கட்டிலுக்கு எடுத்துச் செல்ல விருப்பம்.
நல்ல வேளை அதன் தலை மட்டும் வெளியே தெரிவதால் அதனால் பார்க்கலாம்.
Wenn Papa Ida ins Bett bringt, muss er sieben Gutenachtlieder singen, aber schön laut bitte!
Dann kriegt er einen Kuss. „Danke, Essi!“, sagt Papa verträumt.
„Das war nicht Essi!“, sagt Ida zornig. „Das war doch ich!“
Da freut sich Papa aber.
அப்பா ஈடாவை படுக்கைக்கு அழைத்துச் சென்றால், அவர் ஏழு தாலாட்டுப் பாடல்களை, அதுவும் சத்தமாகப் பாட வேண்டும்!
பின்னர் அவருக்கு ஒரு முத்தம் கிடைக்கின்றது. „நன்றி எஸ்சி!“ என வேண்டுமென்று கூறுகின்றார்.
„அது எஸ்சியின் வேலையில்லை!“, என ஈடா கோபமாகக் கூறுகின்றாள். „அது எனது வேலைதான்!“
அதனால் அப்பா மகிழ்ச்சியடைகின்றார்.
Und dann kriegt Essi auch noch ein Küsschen von Ida.
„Gute Nacht, Essi. Morgen bist du wieder trocken, aber dann wird nicht so viel Quatsch gemacht, ja?“
Da freut sich Essi aber.
அதன் பின்னர் எஸ்சிக்கும் ஈடாவிடமிருந்து இன்னொரு குட்டி முத்தம் கிடைக்கின்றது.
„நன்றாகத் தூங்கு எஸ்சி. காலையில் நீ நன்றாகக் காய்ந்து விடுவாய், ஆனால் ஒன்று! நீ நிறையக் குழப்படி செய்யக் கூடாது சரியா?“
அப்படியென்றால் தான் எஸ்சி சந்தோசமாக இருக்கலாம்.