Abspielen

Gustav Klimperbein

 von Hermann Mensing

 

Abspielen

குஸ்ராவ் கிலுகிலுப்பையன்

எழுதியவர்: ஹேர்மன் மென்சிங்

Illustration: Barbara Gramann
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzung Tamil: Raha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0

Abspielen

Groß ist er nicht. Klein ist er nicht.
Dumm ist er nicht,
und blöd ist er schon gar nicht.

Aber dick, dick ist er!

Fast so dick wie ein Bär.

Sein Name ist Gustav: Gustav Klimperbein!

Abspielen

அவன் உயரமாகவும் இல்லை. அவன் குள்ளமாகவும் இல்லை.

அவன் முட்டாளாகவும் இல்லை. அவன் மூடனாகவும் இல்லை.

ஆனால் மொத்தம், அவன் மொத்தம்!

கிட்டத்தட்ட கரடியைப் போல மொத்தம்.

அவனுடைய பெயர் குஸ்ராவ்: குஸ்ராவ் கிலுகிலுப்பையன்!

Abspielen

Gustav wohnt in einem Haus in einer großen Stadt. Wenn Gustav aus dem Haus geht, ist um ihn herum alles groß. Groß und schlank. Die Häuser, die Autos, die Menschen, sogar die Hunde, die ausgeführt werden, und alle sind schwer beschäftigt.

Gustav nicht.

Abspielen

குஸ்ராவ் பெரிய நகரம் ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் வாழ்கின்றான். குஸ்ராவ் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, அவனைச் சுற்றி இருப்பவை எல்லாம் பெரிதாக இருக்கின்றன. பெரிதாகவும் மெல்லியதாகவும். வீடுகள், மகிழுந்துகள், மனிதர்கள், அழைத்துக் கொண்டு செல்லப்படும் நாய்கள் அத்துடன் அனைவரும் தத்தம் வேலைகளில் கடும் பரபரப்பாக இருக்கின்றனர்.  

குஸ்ராவ் இல்லை.

Abspielen

Gustav findet dicke Bäume schön, an die man sich schmiegen kann, dicke Autos, in denen viel Platz ist, dicke Hunde, mit denen man rumtollen kann und dicke Sparbücher, damit man nie arm ist.

Außerdem liebt er dicke Flugzeuge, dicke Schiffe, dicke Butterbrote, dicke Dicke und dicke Bettdecken.

Und am allerliebsten liebt er seine dicke Mama, seinen dicken Papa, seinen dicken Papagei und seine drei dicken Goldfische.

Abspielen

குஸ்ராவிற்கு மொத்தமான மரங்கள் என்றால் பிடிக்கும், ஏனென்றால் அதில் வசதியாக இருக்கலாம். பெரிய மகிழுந்துகளில் விருப்பம், ஏனெனில் அவற்றில் தாராளமாக இடம் இருக்கும். மொத்தமான நாய்களைப் பிடிக்கும், ஏனெனில் அவற்றுடன் விளையாட நன்றாக இருக்கும். மொத்தமான  சேமிப்புப் புத்தகங்களில் விருப்பம்,

ஏனென்றால ஒருபோதும் ஏழையாக வாழ நேரிடாது.

இவற்றைவிட பெரிய விமானங்கள், பெரிய கப்பல்கள், மொத்தமான பட்டர்ப் பாண், மொத்தமான மொத்தம், அத்துடன் மொத்தமான போர்வை போன்றவற்றையும் அவனுக்குப் பிடிக்கும்.

அவனுக்கு அவனுடைய மொத்தமான அம்மாவையும் மொத்தமான அப்பாவையும் மொத்தமான கிளியையும் மொத்தமான மூன்று தங்கமீன்களையும் தான் எல்லாவற்றையும் விட அதிகமாகப் பிடிக்கும்.

 

Abspielen

Das alles wäre in Ordnung, gäbe es da nicht ein Problem: Die Dünnen verspotten ihn!

„Gustav Wackelbauch!“, rufen sie, wenn er den Schulhoff betritt.

„Gustav Klimperschwein!“, auch. 

„Gustav Klimperbauch!“, manchmal.

„Gustav Wackelbein!“, ab und an.

Aber am liebsten rufen sie:
„Gustav Wackelbauch!“

„Wackelbauch! Klimperschwein! Alles muss versteckt sein!“

 

Abspielen

மெல்லியவர்கள் அவனைப் பரிகசிக்கும் ஒரு பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்,  எல்லாமே சரியாக அமைந்திருக்கும்.

அவன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தவுடன், அவனை இவ்வாறெல்லாம் அழைக்கின்றனர்.

„குஸ்ராவ் தொளதொளவண்டி!“,

இப்படியும் „குஸ்ராவ் கிலுகிலுப்பன்றி!“

சிலவேளைகளில் „குஸ்ராவ் கிலுகிலுவண்டி!“

அவ்வப்பொழுது „குஸ்ராவ் தொளதொளப் பையன்!“

ஆனால் அவர்கள் மிகவும் விரும்பி அழைப்பது „குஸ்ராவ் தொளதொள வண்டி!“ என்பதாகும்.
„தொளதொள வண்டி! அனைத்தையும் ஒளித்து வைக்க வேண்டும் கிலுகிலுப்பன்றி!“

Abspielen

Es fällt ihm schwer, den Spott zu ertragen.
Aber erzählen will er niemandem davon.
Nicht mal Mama und Papa.
Er will eine Lösung finden, aber für sich ganz allein.

Er grübelt und grübelt.

„Ignorieren!“, ruft da eine Stimme in ihm. 
„Igno - was?“
„Rieren!“,  ruft die Stimme erneut.
„Ig - no - rie - ren!“
„Nicht hinhören! Weghören!“
„Den Buckel runterrutschen lassen! Finito!“

Vielleicht wäre das einen Versuch wert ...
Den ganzen Nachmittag hockt Gustav auf den Treppenstufen vor der blauen Vordertür und überlegt.

Abspielen

இந்தக் கிண்டலை சகித்துக் கொள்வது அவனுக்கு சிரமமாக இருக்கின்றது.
ஆனால் இதைப் பற்றி ஒருத்தருக்கும் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை.
அம்மா, அப்பாவிற்கும் தான்.
இதற்குரிய தீர்வை தான் தனியாகவே காணவேண்டும், என்று அவன் விரும்புகின்றான்.

நீண்டநேரமாக அவன் ஆழ்ந்து சிந்திக்கின்றான்.

„அலட்சியம் செய்தல்!“, என்று ஒரு குரல் அவனுக்குள் ஒலிக்கின்றது.
„அலட்சியம் - என்ன?“
„செய்தல்!“, என்கின்றது மீண்டும் அந்தக் குரல். „அலட் - சியம் - செய் - தல்!“
„காதுகொடுப்பதில்லை! செவிமடுப்பதில்லை!“
„நிலவைப் பார்த்து நாய் குரைத்தாற்போல்!“

ஒருதடவை அதை முயற்சி செய்து பார்த்தால் சிலவேளை பயனளிக்கலாம்….
நீலநிற வாசற்கதவுக்கு முன்பாக இருந்த படியில் குந்தி இருந்து கொண்டு பின்னேரம் முழுவதும் சிந்திக்கின்றான்.

Abspielen

Als der Abend sich über die Stadt senkt, schlüpft er durch die Hintertür in den Flur, schleicht die Treppe hoch, geht in sein Zimmer und sperrt innen zu.

„Gustav!“, ruft seine Mutter.
Keine Antwort.

„Gustav, was treibst du da oben?“
„Komm, wir wollen zu Abend essen.“

Abspielen

அந்த நகரத்தில்  இரவுப்பொழுதாகும் போது, அவனது வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக உள்ளே சென்று, முன் ஓடைப் பகுதியைக் கடந்து, மெல்ல மெல்லப் படிகளில் ஏறி அவனது அறைக்குள் சென்று,  கதவை மூடித் தாழ்ப்பாள் இட்டுக் கொள்கின்றான்.

„குஸ்ராவ்!“, என்று அழைக்கின்றார் அவனுடைய தாயார். பதில் வரவில்லை.
„குஸ்ராவ், மேலே இருந்து கொண்டு என்ன செய்கின்றாய்? வா, நாங்கள் இரவு உணவை உண்ண விரும்புகின்றோம்.“

Abspielen

Gustavs Magen knurrt wie ein hungriger Löwe, doch Gustav hat beschlossen, so lange in seinem Zimmer weiter zu denken, bis er weiß, was er tun muss. Aber dann kommt sein Vater und überredet ihn, die Tür aufzusperren.

„Was ist los?“, fragt er.

„Grrrrrrr!“, macht Gustav.

„Ärger?“

„Grrrrrrr!“

Und weil das so gutgetan hat, erzählt er seinen Eltern die ganze Geschichte.

„Oi, oi, oi!“, sagt sein Vater und kratzt sich den Kopf.

„Verdammt!“, sagt seine Mutter.

 
 

Abspielen

பசியுடன் இருக்கும் சிங்கத்தைப் போல குஸ்ராவின் வயிறு கிள்ளுகின்றது. இருப்பினும் இதற்கான தீர்வு அவனுக்குக் கிடைக்கும் வரை, தனது அறைக்குள் இருந்து யோசிப்பது, என்று குஸ்ராவ் முடிவு செய்தான். ஆனால் அப்பொழுது அவனுடைய தந்தை வந்து, கதவைத் திறக்கும்படி அவனுடன் கதைக்கின்றார்.

„என்ன நடந்தது?“, என்று அவர் கேட்கின்றார்.

„ஹ்ஹ்ஏஏ.…..!“,  என உரத்துக் கத்துகின்றான் குஸ்ராவ்.

„பிரச்சனையா?“

„ஹ்ஹ்ஏஏ.…..!“

இது அவனுடைய மனதை சற்று அமைதி அடையச் செய்ததனால், அவன் தனது பெற்றோரிடம் முழுக்கதையையும் கூறுகின்றான்.

„யய்யய்யய்யோ!“, என்று சத்தமிட்டுக்கொண்டு அவனுடைய தந்தையார் தலையைச் சொறிகின்றார்.

„அடக் கடவுளே!“, என்கின்றார் தாயார்

Abspielen

Plötzlich ertönt vor der Tür ein furchterregendes Gebell.
„Ich seh' mal nach, was da los ist!“, sagt Gustav.

Er hat kein bisschen Angst. Er geht einfach zur blauen Vordertür und öffnet sie.

Und dann sieht er ihn!
Den Dürren!
Den Spindeldürren!
Den Großen!
Den Riesengroßen!
Den Furchterregenden!
Den allerfurchterregendsten Hund aller Zeiten.

Abspielen

திடீரென்று வாசற்கதவுக்கு முன்னால் பயங்கரமான குரைத்தல் சத்தம் கேட்கின்றது.
„என்ன நடக்கின்றது என்று, நான் பார்க்கின்றேன்!“, என்று குஸ்ராவ் கூறுகின்றான்.

அவனுக்கு சிறிதளவும் பயம் இல்லை. அவன் சர்வசாதரணமாக அந்த நீலநிற வாசற்கதவடிக்குச் சென்று கதவைத் திறக்கின்றான்.
அப்பொழுது அவன் அதைப் பார்க்கின்றான்!
அந்த மெலிவானதை!
எலும்பும் தோலுமாக உள்ளதை!
பெரிதானதை!
மிகப் பெரிதானதை!
பயங்கரமானதை!
எப்பொழுதும் மிகவும் பயமுறுத்தும்  அந்த நாயை.

Abspielen

Dieser Hund sitzt da. Gustav starrt ihn an. Der Hund starrt zurück.

Gustav sagt: „Guten Tag.“
„Wuff!“, sagt der Hund und beginnt freudig zu wedeln.

„Keine Gefahr!“, ruft Gustav ins Haus, „es ist ein Hund.“
„Komm!“, sagt Gustav.

Abspielen

இந்த நாய் இங்கே இருக்கின்றது. குஸ்ராவ் அதை உற்றுப் பார்க்கின்றான். நாயும் திரும்பி உற்றுப் பார்க்கின்றது.

„வணக்கம்“, என்று கூறுகின்றான் குஸ்ராவ்.
„வள்!“, என்று குரைத்தபடி மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டத் தொடங்குகின்றது.

„ஆபத்தொன்றுமில்லை! இது ஒரு நாய்“, என்று வீட்டில் இருப்பவர்களிடம் கூறுகின்றான் குஸ்ராவ்.
„வா!“, என்று கூப்பிடுகின்றான் குஸ்ராவ்.

Abspielen

Der Hund drängt an Gustav vorbei und marschiert in die Küche.

„Da - da ist ja das Hundchen!“, sagt Gustavs Mutter erschrocken.

Das Hundchen stellt sich auf die Hinterbeine, legt seine Vorderpfoten auf ihre Schultern und schlappt ihr mit der Zunge einmal quer durchs Gesicht.

Abspielen

நாய் குஸ்ராவிற்கு அருகால் சென்று அவனைக்  கடந்து சமையலறைக்கு அணிநடை கட்டுகின்றது. 

„ இங்கே - இங்கே அந்த நாயார்!“, என்று அதிர்ச்சியுடன் கூறுகின்றார் குஸ்ராவின் தாயார்.

நாய் தனது பின்னங் கால்களில் நின்று கொண்டு, முன்பாதங்களை அவருடைய தோள்மூட்டில் வைத்துக்கொண்டு அவருடைய முகத்தை அங்கும் இங்குமாக நாக்கால் நக்குகின்றது.

 

Abspielen

Der Hund hat Augen so groß wie Ostereier. Und ein Maul so groß wie das eines Zwei-Meter-Hais.

Seine Ohren sind so groß wie Spültücher.

Sein Fell ist zerzaust, und sein Schwanz ist so dünn wie ein Rattenschwanz.

 

Abspielen

அந்த நாயின் கண்கள் ஈஸ்ரர் முட்டைகளைப் போலப் பெரிதானவை. அத்துடன் அதன் வாய் இரண்டு மீற்றர் நீளமான சுறாவைப் போன்று பெரியது.

அதன் காதுகள் சமையலறைத் துணியைப் போன்று பெரிதானவை.

அதனுடைய உரோமங்கள் பரட்டையானவை, அத்துடன் அதன் வால் எலி வாலைப் போன்று மெல்லியது.

Abspielen

„Wuff!“, macht er, setzt sich und sieht alle freundlich an.

Gustavs Vater streckt vorsichtig eine Hand aus und streicht ihm über den Kopf.
Der Hund beginnt vor Freude zu zittern.
Gustavs Mutter starrt ihn an.

Gustav schwebt auf der siebten Wolke.
Diesen Hund wird er nie wieder fortlassen!

„Er ist so dünn!“, sagt Gustavs Mutter, „sicher hat er Hunger.“

„Wuff!“, sagt der Hund.

Abspielen

„வள்!“, என்கிறது அது, அங்கே இருந்துகொண்டு அனைவரையும் நட்புடன் பார்க்கின்றது.

குஸ்ராவின் தந்தை கவனமாக ஒரு கையை நீட்டி, அதன் தலையின் மேல் தடவி விடுகின்றார்.

அந்த நாய் மகிழ்ச்சியில் உடலைச் சிலிர்த்துக் கொள்கின்றது.
குஸ்ராவின் தாயார் அதை உற்றுப் பார்க்கின்றார்.

குஸ்ராவ் ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றான்.
அவன் இந்த நாயை ஒருபோதும் கைவிடமாட்டான்!

„அது ஒல்லியாக இருக்கிறது! நிச்சயமாக அதற்குப் பசிக்கின்றது.“,  என்கின்றார் குஸ்ராவின் தாயார்.
„வள்!“, என்கிறது நாய்.

 

Abspielen

Gustav gibt ihm sein Abendessen: einen Teller Spaghetti mit Hackfleisch. Der Hund macht einen Happs und der Teller ist leer.

Der Hund hat sich eng an ihn gedrängt und strahlt ihn mit seinen riesigen Augen an.

 

Abspielen

குஸ்ராவ் தனது இரவு உணவை அதற்குக் கொடுக்கின்றான். ஒரு கோப்பை அரைத்த இறைச்சி சேர்ந்த ஸ்பெக்கற்றி(நூடில்ஸ்). அந்த நாய் ஒரே கௌவலில் அந்தக் கோப்பையை வெறுமையாக்குகின்றது.

நாய் குஸ்ராவிற்கு அருகில் நெருங்கிச் சென்று ஒட்டிக்கொண்டு தனது பெரிய கண்களால் சிரித்தபடி பார்க்கின்றது.

Abspielen

Klar, dass der Hund in Gustavs Zimmer schläft. Klar, dass Gustav ihm am Abend alles von sich erzählt. Klar, dass Gustav ihm einen Namen gibt.

Er nennt ihn Dünner!
Der Hund findet das gut.

Wenn Gustav `Dünner´ ruft, wedelt er.
Wenn Gustav `Dünner, mach Platz!´ sagt,
setzt er sich.
Wenn Gustav `Dünner, mach Hübsch!´ sagt, macht er Hübsch.

Abspielen

ஆம், அந்த நாய் குஸ்ராவின் அறையில் தான் படுக்கின்றது. ஆம், அன்று இரவு குஸ்ராவ் தன்னைப் பற்றிய முழுவிபரத்தையும் அதற்கு கூறுகின்றான். ஆம், குஸ்ராவ் அதற்கு ஒரு பெயர் வைக்கின்றான்.

அவன் அதை ஒல்லியன் என்று அழைக்கின்றான்!
அந்த நாய்க்கு அப்பெயர் பிடித்துவிடுகின்றது.

குஸ்ராவ் `ஒல்லியன்´ என்று கூப்பிடும்போது, அது வாலை ஆட்டுகின்றது.
குஸ்ராவ் `ஒல்லியன் இரு´ என்று சொல்லும் போது, இருக்கின்றது.
குஸ்ராவ் `ஒல்லியன் நிமிர்ந்து நில்!´ என்று கூறும்போது, அது முன்னங்கால்களைத் தூக்கி நிமிர்ந்து நிற்கின்றது.

Abspielen

Als Gustav sich am Morgen für die Schule fertig macht, will Dünner unbedingt mit.

„Das geht nicht!“, sagt Gustav. Dünner knurrt.
„Wirklich!“, sagt Gustav. Dünner zeigt sein gefährliches Gebiss.

„Du musst hierbleiben!“, sagt Gustav, „ich bin doch schon bald wieder da.“ Dünners Nackenhaar sträubt sich. Gustav bleibt nichts anderes übrig: Er bindet Dünner an seinem Bettpfosten an.

Dünner jault, als Gustav geht.

Abspielen

அன்று காலை குஸ்ராவ் பாடசாலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒல்லியனும் சேர்ந்து செல்ல விரும்புகின்றது.

„இது சரிவராது!“, என்கிறான் குஸ்ராவ். ஒல்லியன் முனகுகின்றது.

„உண்மையாகத்தான்!“,  என்கிறான் குஸ்ராவ். ஒல்லியன் தனது பயங்கரமான பல்வரிசையைக் காட்டுகின்றது.
„நீ இங்குதான் இருக்கவேண்டும்! நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்“,  என்கின்றான் குஸ்ராவ், ஒல்லியனின் பிடரிச்சடை சிலிர்க்கின்றது. குஸ்ராவிற்கு வேறு வழி கிடைக்கவில்லை: அவன் ஒல்லியனை கட்டிற் காலில் சேர்த்துக் கட்டிவிடுகின்றான்.

குஸ்ராவ் செல்லும் போது, ஒல்லியன் மெதுவாக ஊளையிடுகின்றது.

Abspielen

In der Schule ist alles wie immer.

„Wackelbauch!“ – „Klimperschwein!“
„Alles muss versteckt sein!“, rufen die Kinder.

Gustav probiert aus, was er sich vorgenommen hat: Er hört gar nicht hin. Er tut so, als ginge ihn das überhaupt nichts an.

Einfach ist das nicht.

Aber in der großen Pause funktioniert das Weghören schon besser.

Abspielen

பாடசாலையில் வழமையைப் போல எல்லாம் நடக்கின்றது.

„தொளதொள வண்டி!“
„அனைத்தையும் ஒளித்து வைக்க வேண்டும் கிலுகிலுப்பன்றி!“, என்று சிறுவர்கள் கூறுகின்றனர்.

குஸ்ராவ் திட்டம் போட்டபடி, பரிசீலித்துப் பார்க்கின்றான்: அவன் காது கொடுத்துக் கேட்காமல் விடுகின்றான். அவன் தனக்கு இவர்கள் கூறாததைப் போல பாசாங்கு செய்கின்றான்.

இலகுவான விடயம் இல்லை அது.

ஆனால் பெரிய இடைவேளையின் போது செவிமடுக்காமல் இருத்தல் கொஞ்சம் வேலைசெய்யத் தொடங்குகிறது.

Abspielen

Als Hans Lange gerade `Wackelbauch´ ruft, rast ein Schatten so grau wie die Morgendämmerung über den Schulhof und bleibt vor Hans stehen.

Der Schatten knurrt.
Hans Lange wird bleich.
Sein Gesicht ist ganz lang jetzt.
Der Schatten zeigt seine gefährlichen Zähne.
Hans Lange erstarrt.

Gustav hat den Schatten erkannt.
„Dünner, mach Platz!“, ruft er.
Hans Lange setzt sich.
„Nein, doch nicht du!“, ruft Gustav.

Abspielen

இப்பொழுது ஹன்ஸ் இலங்க தொளதொள வண்டி என்று கூப்பிடும் போது, வைகறைப் பொழுதைப் போன்ற சாம்பல் நிறத்தில் நிழல் ஒன்று பாடசாலை முற்றத்தின் வழியாக வேகமாக ஓடிவந்து ஹன்ஸிற்கு முன்னால் நிற்கின்றது.

அந்த நிழல் முனகுகின்றது. ஹன்ஸ் இலங்கவின் முகம் வெளிறுகின்றது.

இப்பொழுது அவனுடைய முகம் ஒடுங்குகின்றது. அந்த நிழல் தனது பயங்கரமான பற்களைக் காட்டுகின்றது. ஹன்ஸ் இலங்க விறைத்துப் போகின்றான்.

குஸ்ராவ் அந்த நிழலை அடையாளம் கண்டு கொண்டான். „ஒல்லியன் இரு!“, என்கிறான் அவன். ஹன்ஸ் இலங்க இருக்கின்றான். „இல்லை,  உன்னை இல்லை!“, என்கிறான் குஸ்ராவ்.

Abspielen

Hans Lange hockt auf dem Schulhof.
Dünner sitzt neben ihm.

Gustav kommt.
„Dünner!“, sagt er, „wo kommst du denn her?“

Dünner bibbert vor Freude und reibt seine kühle Hundeschnauze an Gustavs Nase.

Hans Lange steht vorsichtig auf.
„Ist das deiner, Gustav?“, fragt er.
`Hab´ ich richtig gehört?´, denkt Gustav.
`Hat er Gustav gesagt?´

Abspielen

ஹன்ஸ் இலங்க பள்ளி வளாகத்தில் குந்தி இருக்கின்றான். ஒல்லியன் அவனுக்கருகில் இருக்கின்றது.

குஸ்ராவ் வருகின்றான். „ஒல்லியன்! எங்கிருந்து இங்கே வருகின்றாய்?“ என்கின்றான் அவன்,

ஒல்லியன் மகிழ்ச்சியில் சிலிர்த்தபடி குஸ்ராவின் மூக்கில் தனது மூஞ்சையால் உராஞ்சுகின்றது.

ஹன்ஸ் இலங்க கவனமாக எழும்புகின்றான்.
„இது உன்னுடையதா, குஸ்ராவ்?“ என்று வினவுகின்றான்.
„எனக்கு சரியாகக் கேட்டதா?“, என்று யோசிக்கின்றான் குஸ்ராவ். „அவன் குஸ்ராவ் என்று கூறினானா?“

Abspielen

„Ist das dein Hund?“, wiederholt Hans.

„Nein!“, sagt Gustav, „jaaaa! Ich - ich - äh - ich weiß noch nicht!“

„Ja, was denn nun, Klimperschwein?“

Hans hat noch nicht zu Ende gesprochen, als Dünner ihm schon wieder die Zähne zeigt.
Und nicht nur das.

Dünner greift sich Hans Hosenbein und zerrt einmal kräftig daran.
So kräftig, dass Hans auf den Hintern fällt.

Abspielen

„இது உனது நாயா?“, என்று மீண்டும் கேட்கின்றான்.

„இல்லை!“, என்கின்றான் குஸ்ராவ், „ஆம்! எனது - எனது - இல்லை! எனக்கு இன்னும் தெரியவில்லை!“

„ஆ… என்ன கிலுகிலுப்பன்றி?“

ஹன்ஸ் சொல்லி முடிப்பதற்குள் ஒல்லியன் அவனுக்கு மீண்டும் தன் பற்களைக் காட்டுகின்றது.
அது மட்டுமில்லை.

ஒல்லியன் ஹன்ஸினுடைய காற்சட்டைக் காலைப் பிடித்து ஒருமுறை பலவந்தமாக தாக்குகின்றது.
அந்தத் தாக்குதலால், ஹன்ஸ் பின்புறமாக விழுகின்றான்.

Abspielen

„Guter Hund!“, sagt Hans flehend, „braver Hund!“
„Dünner, komm lass ihn!“, sagt Gustav.

Die Pause ist vorüber.
Dünner hockt am Schultor und wartet.
Gustav hat ihm das gesagt.

In Gustavs Klasse dreht sich alles um Dünner.
Wo er herkommt! will man wissen.
Wie er heißt? Wie alt er ist?
Und ob er Menschen frisst undsoweiter...

„Ja“, sagt Gustav, „er kann Menschen fressen.“
„Klimperschwein hat einen Menschenfresser!“

Abspielen

„நல்ல நாய்!, கெட்டிக்கார நாய்!“ என்று கெஞ்சியபடி கூறுகின்றான்,
„ஒல்லியன், அவனை விட்டுவிட்டு வா!“, என்று கூறுகின்றான் குஸ்ராவ்.

இடைவேளை முடிவடைகின்றது.

ஒல்லியன் பாடசாலைப் படலையடியில் குந்தியபடி காத்திருக்கின்றது. குஸ்ராவ் தான் அங்கிருக்கும்படி அதற்குக் கூறினான்.
குஸ்ராவின் வகுப்பு முழுவதின் கவனமும் ஒல்லியனின் பக்கம் திரும்புகின்றது. அதைப்பற்றி அறிவதில் விருப்பம். எங்கிருந்து அது வந்தது? அதனுடைய பெயர் என்ன? அதற்கு எத்தனை வயது? அது மனிதர்களைக் கடிக்குமா? எனப் பல கேள்விகள்…..
„ஆம், அது மனிதர்களைக் கடிக்கலாம்“, என்கின்றான் குஸ்ராவ். „கிலுகிலுப்பன்றியிடம் ஒரு கடிநாய் இருக்கின்றது!“

 

Abspielen

Im gleichen Augenblick ertönt von fern ein so wildes Gebell, dass alle erstarren.

„Tja!“, sagt Gustav, „Dünner hat was dagegen, wenn ihr mich Klimperschwein nennt!“

„Aber das ist doch nur Spaß!“, sagen alle.

„Schöner Spaß“, sagt Gustav, „ich kann nicht drüber lachen!“

 

Abspielen

அந்த நொடிப்பொழுதில் தொலைவில் இருந்து பயங்கரமான குரைத்தல் ஒலி கேட்க, அனைவரும் விறைத்துப்போய் நிற்கின்றனர்.

 

„இதுதான்! நீங்கள் என்னை கிலுகிலுப்பன்றி என்று கூப்பிடுவதில், அதற்கு உடன்பாடில்லை!“, என்கின்றான் குஸ்ராவ்.

„ஆனால் இது சும்மா வேடிக்கைக்குத்  தானே!“,  என்கின்றனர் அனைவரும்.

„நல்ல வேடிக்கை,  இதற்கெல்லாம் என்னால் சிரிக்க முடியாது!“,  என்கின்றான் குஸ்ராவ்.

Abspielen

Die Schule ist aus.
Dünner begrüßt Gustav.
Der dünne Rattenschwanz peitscht hin und her.
Die großen Augen leuchten vor Freude.

„Komm!“, sagt Gustav, „nach Hause.“

Die Kinder schauen ihnen nach.
So einen Hund, den hätten sie auch gern.

Abspielen

பாடசாலை முடிவடைகின்றது.
ஒல்லியன் குஸ்ராவை வரவேற்கின்றது.
ஒல்லியன் தனது எலிவாலால் அங்கும் இங்குமாக அடிக்கின்றது.
மகிழ்ச்சியில் அதனுடைய பெரிய கண்களில் ஒளி பிரகாசிக்கின்றது.

„வா! வீட்டுக்குப் போவோம்“,  என்கின்றான் குஸ்ராவ்.

சிறுவர்கள் அவர்களைப் பாரக்கின்றார்கள்.
இப்படி ஒரு நாயை, அவர்களும் வைத்திருக்க ஆசைப்படுகின்றனர்.

 

Abspielen

Ende

Abspielen

முற்றும்

 

Gehe zu:

in Landscape-Ansicht drehen