Abspielen

In Wirklichkeit war es anders

 von Achim Bröger

Abspielen

யதார்த்தம் ஆனால் உண்மை வேறு

எழுதியவர் அஃஹிம் புரோய்கர்

Illustration: Bianca Mense
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzerin Tamil: Radha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0

Abspielen

Ein Junge saß am Fluss.
Die Sonne schien und ließ das Wasser blitzen und funkeln.
Da hinten wachsen die Ufer zusammen.
Dort wird der Fluss immer schmaler, stellte sich der Junge vor, obwohl man ihm gesagt hatte: „Das sieht nur so aus. In Wirklichkeit ist es anders.“
Aber er glaubte das nicht.

 

Abspielen

இளைஞன் ஒருவன் ஆற்றங்கரையில் இருந்தான்.
சூரிய ஒளிப் பிரகாசத்தால் நீரும் தகதகவென மினுங்கிக் கொண்டிருந்தது.
பின்புறத்தில்  ஆற்றின் இருகரைகளும் ஒன்றாகச்சேர்ந்து நீண்டு சென்றன.

 

„அது இப்படித்தான் காட்சி அளிக்கும், ஆனால் உண்மை வேறு", என ஒருவர் அவனுக்குக் கூறியிருந்தும், அந்த ஆறு ஒடுங்கிக் கொண்டே செல்லும் என அந்த இளைஞன் கற்பனை செய்தான்.
அதனால் அவர் கூறியதை அவன் நம்பவில்லை.

Abspielen

Und deswegen wollte er gerne wissen, wo diese Stelle war.
„Ich suche sie“, nahm er sich vor.
Lange ging er den schmalen Weg am Flussufer entlang.
Trotzdem blieb die Stelle, wo der Fluss schmal wurde, immer weiter vor ihm.
Komisch, dachte er, obwohl ich gehe und gehe, komme ich nicht näher.

Abspielen

,எனவே அவன் எங்கே அந்த இடம் முடிகிறது எனச் சரியாக அறிந்துகொள்ள விரும்பினான்.
„நான் அதைத் தேடப்போகின்றேன்“", என்று அவன் தீர்மானித்தான்.
அந்த ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள   ஒடுங்கிய பாதையால் நீண்ட தூரத்திற்கு அவன் நடந்து சென்றான்.

 

ஆனாலும் சென்றடைந்த இடம் அப்படியே இருக்க, ஆறு ஓடுங்குவது அவன் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் இருந்தது.
வேடிக்கைதான், நான் போகப் போக அந்த இடத்தை நெருங்குவதாகத்; தெரியவில்லை என எண்ணினான்.

Abspielen

Er traf einen Mann.
„Guten Tag“, wünschte der Junge.
„Ich suche die Stelle, wo der Fluss dünn wie ein Strich wird. Wo finde ich sie?“
Der Mann lachte und fragte: „Weißt du nicht, wie das in Wirklichkeit ist?“
„Nicht genau“, antwortete der Junge.
„Und ich glaube auch nicht alles, was man mir erzählt.“
„Na, dann such nur“, sagte der Mann kopfschüttelnd und ging weiter.

Abspielen

அவன் ஒரு மனிதனைச் சந்தித்தான்.
„வணக்கம்",  எனக் கூறினான் இளைஞன்.
„நான் ஒரு இடத்தைத் தேடுகின்றேன், இந்த ஆறு ஒடுங்கிப்போய் ஒரு கோட்டில் முடியும் தானே. அவ்விடத்தை நான் எங்கு கண்டுபிடிக்கலாம்?“

 

அந்த மனிதன் சிரித்தபின் கேட்டான்: „உண்மையில் எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியாதா?“
„சரியாகத் தெரியாது", எனப் பதில் கூறினான் இளைஞன். „யார் எதை எனக்குக் கூறினாலும், நான் அனைத்தையும் அப்படியே நம்புவதில்லை.“ „அப்படியென்றால் தேடிக்கொள்,“ எனக் கூறிய மனிதன் தலையை ஆட்டியபடி தொடர்ந்து சென்றான்.

Abspielen

Der Junge fragte noch einige Leute. Sie lachten über ihn.
Und einige sagten: „Die Stelle gibt´s nicht.
Wir haben keine Zeit für solchen Unsinn.“
Darüber ärgerte sich der Junge.
Und er suchte immer weiter, bis es dunkel wurde.

 

Abspielen

அவ்விளைஞைன் இன்னும் பலரிடம் வினவினான். அவர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர். „அவ்வாறு ஒரு இடம் இல்லை.
அர்த்தமற்ற விடயங்களுக்கு எங்களுக்கு நேரமில்லை,“ எனச் சிலர் கூறினர். அதனால் இளைஞன் கோபமடைந்தான். இருளும் வரையும் அவன் தொடர்ந்து தேடினான்.

 

 
 

Abspielen

Da kam er zu einem Haus.
Davor saß ein Mann am Bootssteg und sah über das Wasser.

 

Abspielen

அவன் ஒரு வீட்டைச் சென்றடைந்தான்.
வீட்டிற்கு முன் படகு இறங்குதுறையில் ஒரு மனிதன் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

Abspielen

Und der Junge fragte auch ihn: „Ich suche die Stelle, wo der Fluss schmal wird.
Ich sehe sie immer vor mir. Kannst du mir sagen, wo ich sie finde?“
Der Mann lächelte und sagte: „Ich weiß nicht, wo sie ist und wo du sie findest.
Aber ich habe viel Zeit, denn ich bin schon ziemlich alt.
Ich würde die Stelle gerne mit dir suchen.“

Abspielen

அவன் அவரிடமும் கேட்டான்: „இந்த ஆறு எங்கே ஒடுங்குகிறது என்பதை நான் தேடுகின்றேன்.
நான் பார்க்கும் போதெல்லாம் அது எனக்கு முன்னேதான் தெரிகிறது. எங்கே அதைக் கண்டுபிடிக்கலாம் எனக் கூறுவீர்களா?“

அந்த மனிதன் சிரித்தபின் கூறினான்: „அது எங்கு இருக்கிறது என்றும், அதை நீ கண்டுபிடிக்கலாமா என்றும் எனக்குத் தெரியாது.
நான் வயதானவன் என்பதால் எனக்கு நிறைய நேரம் இருக்கிறது.
நானும் உன்னுடன் சேர்ந்து இந்த இடத்தைத் தேடுவதில் ஆவலாக உள்ளேன்.“

Abspielen

Da war der Junge nicht mehr allein.
Der Mann holte seine Mundharmonika aus dem Haus und das Fernrohr.
Dann packten sie viele Dinge in das Boot des Mannes, warfen den Motor an und fuhren los.
Nebeneinander standen sie im Boot.
Manchmal sangen sie.
Oft sagten sie: „Da vorne ist die Stelle.“
Dann starrten sie durch das Fernglas.

 

Abspielen

இப்பொழுது இளைஞன் தனியாகவில்லை.
அந்த மனிதன் வீட்டிலிருந்த ஊதும்  இசைக்கருவியையும் தொலைநோக்கியையும் எடுத்து வந்தான்.

பயணத்திற்குத் தேவையான வேறு பல பொருட்களையும் படகில் எடுத்துவைத்துக் கொண்டு, இயந்திரத்தை இயக்கிப் புறப்பட்டனர்.
இருவரும் படகில் அருகருகே நின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் பாட்டுப் பாடினர்.
„இதோ! அந்த இடம் வந்துவிட்டது,“ என அடிக்கடி கூறினர்.
பின் தொலைநோக்கியில் உற்றுப் பார்த்தனர்.

Abspielen

Aber sie kamen nie bis dorthin.
Im Gegenteil, der Fluss wurde immer breiter.
Schließlich war er so breit, dass er zum Meer geworden war.
Jetzt schaukelten der Junge und der Mann auf dem riesigen Wasser.
Und sie sahen, dass weit vor ihnen am Horizont Wasser und Himmel zusammentrafen.
Auch diese Stelle wollten sie finden.

 

Abspielen

ஆனால் அவர்கள் அந்த இடத்தை வந்து அடையவேயில்லை.
அதற்கு நேர்மாறாக ஆறு அகன்று கொண்டு சென்றது.
இறுதியில் அது பரந்து விரிந்து கடலாக மாறியது.

 

இப்பொழுது படகில் இருந்த இளைஞனும் மனிதனும்   பெருங்கடலில் ஆடினர்.
அத்துடன் அவர்கள் தொலைவில் நீரும் வானமும் சந்திக்கும் இடமாகிய தொடுவானத்தைக் கண்டனர்.
இந்த இடத்தையும் கண்டுபிடிக்க விரும்பினர்.

Abspielen

Am Abend ging die Sonne unter.
„Sie versinkt im Meer“, sagte der Junge.
„Das zischt bestimmt.“
Da suchten sie auch die Stelle, wo die Sonne im Meer versank.
Sie suchten, wo das Wasser und der Himmel zusammenstießen.
Und sie suchten, wo der Fluss schmal wie ein Strich wurde.

 

Abspielen

மாலைப் பொழுதில் சூரியன் மறைந்தது.
„அது கடலுக்குள் அமிழ்ந்து போகிறது“,“ என்றான் இளைஞன்.
„அனேகமாக இஸ் என்ற சத்தம் கேட்கும்.“

 

அவர்கள் கடலிற்குள் சூரியன் மறைந்து போன இடத்தையும் தேடினர்.
நீர் வானத்தைத் தொடும் இடத்தையும் தேடினர்.
அத்துடன் ஒடுங்கிப் போகும் ஆறு சென்று முடியும் கோட்டையும் தேடினர்.

Abspielen

Die beiden wurden Freunde, und sie fühlten sich wohl in ihrem Boot.
Sie unterhielten sich.
Sie aßen und tranken miteinander.
In der Nacht leuchteten sie mit der Taschenlampe über das Wasser.
Das glitzerte dann wie die Sterne über ihnen.

 

Abspielen

இருவரும் நல்ல நண்பர்களாகியதுடன், படகில்  மகிழ்ச்சியாக இருப்பதையும் உணர்ந்தனர்.
அவர்கள் நன்றாகப் பொழுதைக் கழித்தனர்.
அவர்கள் சேர்ந்து சாப்பிட்டனர், குடித்தனர்.
இரவுப்பொழுதில் அவர்கள் கைமின்விளக்கை கடலில் பிடித்துப் பார்த்தனர்.
நட்சத்திரம் அவர்களிடையே பிரகாசிப்பதைப் போல் அது பிரகாசித்தது.

 

Abspielen

Wenn das Wetter schön war,
sprang der Junge ins Meer.
Er schwamm und tauchte.
Große Fische und Muscheln sah er.
Sie kamen in Stürme, wild tanzte ihr Boot auf den Wellen.

 

Abspielen

காலநிலை நன்றாக இருந்தபோது, அவன் கடலிற்குள் குதித்தான்.
அவன் நீந்தினான், சுழியோடினான்.
பெரிய மீன்களையும் மட்டிகளையும் அவன் கண்டான்.
புயற்காற்று வீசியபோது, அவர்களது படகு அலைகளில் வேகமாக ஆடியது.

Abspielen

Sie fuhren um die ganze Erde.
Von einem Meer ins andere und durch die Flüsse vieler Länder.
Wo es schön war, blieben sie länger.
Aber irgendwann fuhren sie weiter.
Immer geradeaus.
Die Stelle, wo der Fluss dünn wurde, wo die Sonne im Wasser versank und wo sich das Wasser und Himmel berührten, fanden sie nirgends.

Abspielen

அவர்கள் முழு உலகத்தையும் சுற்றி வந்தனர்.
ஒரு கடலில் இருந்து இன்னொரு கடலுக்கும், ஆறுகள் ஊடாக பல நாடுகளையும் சுற்றினர்.
அழகான இடங்களில் அதிகமாகத் தங்கியிருந்தனர்.

 

ஆனால் ஒருகட்டத்தில் தொடர்ந்து பயணித்தனர்.
எப்பொழுதும் நேர்வழியே சென்றனர்.
ஆறு ஒடுங்கும் இடத்தையும் சூரியன் நீருக்குள் அமிழும் இடத்தையும் வானமும் நீரும் சந்திக்கும் இடத்தையும் அவர்களால்  கண்டுபிடிக்க முடியவில்லை.

Abspielen

Als sie nach Hause kamen, sagten einige Leute: „Seid ihr dumm“-
„So ein Blödsinn“, meinten andere.
Da sahen sich der Junge und der Mann an und lächelten.
„Immerhin“, sagte der Junge.
„Ich weiß jetzt, dass es die Stellen, die wir gesucht haben, nicht gibt.
Aber ich weiß das nicht nur so, weil es mir jemand gesagt hat.
Ich weiß es wirklich.“

 

Abspielen

வீட்டுக்கு வந்தபின்னர் "நீங்கள் முட்டாள்கள்",  என்று ஒருசிலர் கூறினர்.
„இப்படி ஒரு முட்டாள்தனமா",  எனக் கருதினர் சிலர்.

அந்த இளைஞனும் மனிதனும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தனர்.
„இதுவே போதும்“",  என்றான் இளைஞன்.
„நாங்கள் தேடிய இடங்கள் எதுவும் இல்லை என்று எனக்கு இப்பொழுது தெரிகிறது.
ஆனால் ஒருவர் கூறித்தான் நான் இதை அறிந்துகொள்ளவில்லை.
எனக்கு இப்போது அந்த உண்மை  தெரியும்.“

Abspielen

Der Mann nickte und sagte: „Wir haben viele Dinge gesehen.
Wir haben in warmem Wasser gebadet, in der Sonne gelegen und nachgedacht.
Wir haben Menschen getroffen.
Und außerdem sind wir lange zusammen gewesen.
Schön war das.“

 

Abspielen

அந்த மனிதன் தலையை ஆட்டியபடி கூறினான்: „நாங்கள் நிறைய விடயங்களைப் பார்த்து அனுபவித்திருக்கின்றோம்.

நாங்கள் சூடான நீரில் குளித்தோம், சூரிய வெளிச்சத்தில் இருந்தோம் அத்துடன் நிறைய சிந்தித்தோம்.
நாங்கள் பல மனிதர்களைச் சந்தித்தோம்.
அதைவிட நாம் இருவரும் நீண்டகாலம் ஒன்றாக இருந்தோம்.
இதுவே நன்றாக இருந்தது.“

 

Abspielen

Danach gähnten die beiden und gingen schlafen.
Sie waren ja auch in Afrika, in Indien und noch weiter gewesen.
Und das macht müde.

 

Abspielen

பின்னர் இருவரும் கொட்டாவி விட்டபடி படுக்கச் சென்றனர்.
அவர்கள் இருவரும் ஆபிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இன்னும் பல நாடுகளுக்கும் தொடர்ந்து சென்றிருந்தனர்.
அதனால் தான் இந்தக் களைப்பு.

 

Abspielen

Ende
 

Abspielen

முற்றும்.

 

Gehe zu:

in Landscape-Ansicht drehen