Illustration: Gicell Arteaga Paspuel
Titel: Dorothee Wegener
Sprecher Deutsch: Timo Matzolleck
Übersetzer Tamil: Subramaniam Paramananthan
Sprecherin Tamil: Radha Inthirarajah
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0
von Peter Härtling
பீற்றர் ஹெயாட்லிங்
Vor zwei Jahren war ich mit meinem Kind in Holland am Meer.
Das Wetter war gut, wir gingen oft baden.
Mein Sohn Clemens, der damals fünf Jahre alt war, hatte fürs Meer einen großen grüngelben Gummifrosch zum Aufblasen bekommen, den er sehr mochte und den er immer hinter sich herschleifte.
Im Wasser setzte er sich auf den Frosch und ritt mit ihm auf den Wellen.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எனது பிள்ளையுடன் ஒல்லாந்து நாட்டிலுள்ள கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.
காலநிலை நன்றாக இருந்ததனால், நாங்கள் அடிக்கடி குளிக்கப் போயிருந்தோம்.
அப்போது ஐந்து வயதாகியிருந்த எனது மகன் கிளேமன்ஸ்க்கு கடற்கரைக்கு கொண்டு செல்வதற்காக காற்று நிரப்பக்கூடிய பெரிய பச்சை மஞ்சள் நிறமான இறப்பர் தவளை ஒன்று கிடைத்தது. அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை எப்போதும் தன்னுடனே கொண்டு சென்றான்.
தண்ணீரில் அத்தவளையின்மீது இருந்துகொண்டு அலைகளின்மீது சவாரிசெய்தான்.
Ich weiß nicht, ob ihr alle Ebbe und Flut kennt.
Jedes Meer hat Ebbe und Flut. Bei der Flut kommt das Wasser aufs Land zu, bei der Ebbe geht es vom Land weg.
Es geht mit einer solchen Gewalt und mit einer solchen Schnelligkeit, dass jemand, der bei Ebbe im Meer schwimmt, ungeheuer schnell aufs Meer hinausgezogen wird.
Darum soll man bei Ebbe nicht schwimmen.
கடல் வற்றுவதும், பெருக்கெடுப்பதும் என்னவென்று உங்களுக்கு தெரியுமோ என்று எனக்குத் தெரியாது.
ஒவ்வொரு கடலும் வற்றும் பெருக்கெடுக்கும். கடல் பெருக்கெடுக்கும்போது வெள்ளம் நிலத்தை நோக்கி வரும். வற்றும்போது கடல், நீரை உள்வாங்கிக்கொள்ளும்.
மிக வேகமாகவும், ஆரவாரத்துடனும் கடல், நீரை உள்வாங்கும்போது யாராவது கடலில் நீந்தினால், அவர்களையும் கடல் இழுத்துச் சென்றுவிடும்.
எனவே அவ்வாறு கடல் வற்றும் போது யாரும் கடலில் நீந்தக்கூடாது.
Clemens wusste das auch und tat es nie.
Aber er dachte, der Frosch kann es, und er setzte den Frosch aufs Wasser, wartete darauf, dass er ein bisschen schwimme, und plötzlich höre ich ihn schreien: Der Frosch haut ab!
Der Frosch haut ab!
Und ich sehe, wie der Frosch schon ganz weit draußen auf dem Meer ist.
இது கிளேமன்ஸ்க்கும் தெரியும் என்பதனால் எப்போதுமே அவன் அந்த நேரத்தில் சென்றதில்லை.
ஆனால் அவன் தவளையினால் நீந்த முடியும் என நினைத்து, தவளையைத் தண்ணீரில் விட்டான். அது நீந்தும்வரை காத்திருந்தான்.
திடீரென அவன் கத்தும் சத்தம் கேட்கிறது. தவளை போகிறது! தவளை போகிறது! எனக் கத்துகின்றான்.
நான் பார்க்கும் போது அந்தத் தவளை கடலில் நீண்ட தூரம் போய்க்கொணடிருந்தது.
Ich bin noch ins Meer hineingelaufen,
um den Frosch zu fangen,
habe jedoch bemerkt,
wie mir der Sog die Füße wegzog,
wie der Sand von der Ebbe
ins Meer hineingerissen wurde,
bin dann stehen geblieben
und habe dem Frosch nachgeschaut,
der immer kleiner und kleiner wurde.
நான் அந்தத் தவளையைப் பிடிக்க கடலுக்குள் சென்றபோது, கடல் நீரை உள்வாங்கும்போது மண்ணையும் சேர்த்து இழுத்துச் செல்வதுபோல எனது கால்களையும் இழுத்துச் செல்வதை உணர்ந்தேன். நான் அந்த இடத்தில் நின்றுகொண்டு, பார்த்தபோது அது சிறிது சிறிதாகத் தெரிவதைப் பார்த்தேன்.
Clemens heulte fürchterlich.
Er fragte mich: Wohin schwimmt der Frosch denn nun?
Weil auf der anderen Seite des Meeres England ist, sagte ich ihm: Der Frosch ist morgen wahrscheinlich schon in England.
Von da an dachte ich mir Geschichten aus, die dem Frosch, den wir bald nicht mehr sahen, auf dem weiten Meer zugestoßen sein könnten.
கிளேமன்ஸ் சத்தம்போட்டு அழுதான். தவளை இப்போது எங்கே நீந்திப்போகிறது? என்று என்னைக் கேட்டான்.
கடலின் அடுத்த பக்கம் இங்கிலாந்து இருக்கிறது. தவளை நாளைக்குப் பெரும்பாலும் இங்கிலாந்துக்குப் போய்விடும், என்று நான் அவனுக்குச் சொன்னேன்.
அதிலிருந்து, பரந்த கடலில் எமது கண்பார்வையிலிருந்து மறைந்த அந்தத் தவளைக்கு என்ன நேர்ந்திருக்கலாம் என்பதைக் கதைகளாகக் கற்பனை செய்து பார்த்தேன்.
Vielleicht diese Geschichte:
Der Frosch schwimmt und schwimmt.
Er ist auf dem Meer winzig klein.
Ein riesiger Dampfer kommt an ihm vorbei, ein Junge schaut vom Dampfer herunter, sieht den winzigen Frosch und ruft: Da ist ein Frosch!
Ich möchte den Frosch haben!
சிலவேளை இந்தக் கதையாக இருக்கலாம்:
தவளை நீந்திநீந்திச் செல்கின்றது. அது கடலில் மிகவும் சிறியதாகத் தெரிகின்றது.
ஒரு பெரிய புகைக்கப்பல் அந்த தவளையைக் கடந்து செல்கின்ற போது அந்தப் புகைக்கப்பலில் இருந்த ஒரு சிறுவன் அந்த சிறிய தவளையைப் பார்க்கின்றான்.
அங்கே ஓரு தவளை! அது எனக்கு வேண்டும், என்று கத்துகின்றான்.
Der Kapitän, der das hört, sagt:
Wir können deinetwegen den Dampfer nicht anhalten.
Wenn wir den Dampfer anhalten, brauchen wir so lange, bis das Schiff steht, dass wir den Frosch schon gar nicht mehr sehen.
So winkt der Junge dem Frosch nach, und der schwimmt weiter – vielleicht doch nach England.
அதைக் கப்பலின் மாலுமி கேட்கின்றான்.
உனக்காக கப்பலை நிறுத்தமுடியாது.
அப்படிக் கப்பலை நிறுத்தினாலும் அது நிற்பதற்கு நீண்டநேரம் எடுக்கும, அதற்கிடையில் தவளை எமது பார்வையிலிருந்து மறைந்துவிடும்
என்று சொல்கின்றான்.
ஆகவே சிறுவன் தவளைக்கு கை காட்டி வழி அனுப்புகின்றான். தவளை தொடர்ந்து நீந்துகின்றது. சிலவேளை அது இங்கிலாந்தை நோக்கிச் செல்லலாம்.
Oder diese Geschichte:
Der Frosch schwimmt und schwimmt, und er kommt tatsächlich nach England.
Es ist wieder Flut, und der Frosch wird
auf eine Röhre zugetrieben, aus der schmutziges Wasser ins Meer fließt.
Die Flut drückt den Frosch in die Röhre hinein. Da drinnen ist es dunkel und es stinkt.
Die Röhre wird enger, aber das Wasser hat eine solche Gewalt, dass es den armen Gummifrosch immer tiefer hineinschiebt.
அல்லது இந்தக் கதை:
நீந்தி நீந்திப் போகும் தவளை உண்மையாகவே இங்கிலாந்தைச் சென்றடைகின்றது.
இப்போது மீண்டும் கடல் பெருக்கெடுக்கின்றது.
அந்தத் தவளை அழுக்கு நீரை கடலுக்கு கொண்டுவரும் ஒரு குழாயை நோக்கிச் செல்கின்றது.
அது கடற்பெருக்கினால் தள்ளப்பட்டு குழாய்க்குள் செல்கின்றது.
அதனுள்ளே ஒரே இருட்டாகவும் துர்நாற்றமாகவும் இருக்கிறது.
அந்தக் குழாய் போகப் போக ஒடுக்கமானதாக இருந்ததாலும், தண்ணீர் கொடுத்த அழுத்தத்தினாலும் பரிதாபத்துக்குரிய அந்தத்தவளை அதற்குள் நீண்டதூரம் தள்ளப்படுகின்றது.
Dann ist Ebbe, und das Wasser geht zurück, der Frosch hängt in der nach Moder und Unrat riechenden Röhre fest.
Ob er immer dort bleiben wird? Nein!
Denn allmählich geht die Luft aus dem Frosch raus,
er wird kleiner,
und als kleiner Frosch kann er mit runzliger Haut wieder aus der Röhre hinausschwimmen,
wird an den Strand getrieben,
wo ihn ein Kind findet,
mitnimmt und wieder dick aufbläst.
இப்போது கடல் வற்றுகிறது. நீர் கடலை நோக்கித் திரும்பிச் செல்லும்போது குப்பையும் அழுக்கும் துர்நாற்றமும் நிறைந்த அந்தக் குழாய்க்;குள் தவளை சிக்கிவிடுகின்றது.
அது அங்கேயே தங்கிவிடுமோ? இல்லை!
தவளைக்குள் நிரப்பப்பட்டிருந்த காற்று படிப்படியாக வெளியேற சிறிது சிறிதாகி சுருங்கிய தோலுடன் திரும்பவும் அந்தக் குழாயிலிருந்து நீந்தி வெளியே வருகின்றது. தவளை கரையை நோக்கி மிதந்து மிதந்து வந்தடைகின்றது. அங்கே ஒரு பிள்ளை அதைக் கண்டெடுத்துச் சென்று மீண்டும் காற்றடித்துப் பெருப்பிக்கின்றது.
Ich denke mir eine ganz spannende Froschgeschichte aus:
Der Frosch treibt lange auf dem Meer, bis er in die Nähe der englischen Küste kommt.
Die Wellen werden immer höher.
Am Himmel zieht sich ein Unwetter zusammen.
Es blitzt.
Aus einem ganz leichten Wind wird ein großer Sturm, der so heftig ist, dass selbst die schwersten Schiffe schnell in den Hafen hineinfahren und warten, bis er vorüber ist.
நான் ஒரு மிகவும் சுவாரஸ்யமான தவளைக்கதை ஒன்றை கற்பனை செய்கின்றேன்:
இங்கிலாந்துக் கரையை நெருங்கும் வரை அந்தத் தவளை நீண்டநேரம் மிதந்துசெல்கின்றது.
வர வர அலைகள் மிகவும் உயரமாக வருகின்றன.
வானத்தில் காலநிலை சீர்கெடுவதற்கான அறிகுறி தென்படுகின்றது. மின்னலடிக்கின்து.
மெதுவாக வீசிய காற்று ஒரு பெரும் புயலாக மாறுகின்றது. அது மிகவும் கடுமையாக வீசுகின்றது. அதிக பாரமான கப்பல்கள் விரைந்து துறைமுகத்துக்குச் சென்று, அந்தப் புயல் கடந்து செல்லும்வரை காத்திருககின்றன.
Der Frosch ist jedoch so leicht, dass es ihm egal ist, wie hoch die Wellen sind.
Er hopst von einer Welle zur anderen,
saust manchmal in ein Wellental,
wo das Wasser über ihm zusammenschlägt,
und wer solche Gummifrösche kennt,
hat jetzt nur Angst,
dass der Stöpsel rausgedrückt wird und die Luft entweicht.
Dann würde der Frosch untergehen.
Doch der Frosch in meiner Geschichte geht nicht unter.
தவளை பாரம் குறைந்ததாக இருப்பதனால் அலைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதற்குப் பரவாயில்லை.
அது ஒரு அலையிலிருந்து இன்னொரு அலைக்கு துள்ளிக் குதிக்கின்றது.
சிலசமயம் அலைகளுக்கிடையில் ஏற்படும் பள்ளத்தில் அது முட்டி மோதுகின்றது, இப்பொழுது பயம் என்னவென்றால் இப்படியான றப்பர் தவளையைத் தெரிந்தவர்கள் அதன் அடைப்பானை விலக்கிவிட்டால் காற்று வெளியேறிவிடும்.
அவ்வாறு செய்தால் அது தண்ணீருக்குள் மூழ்கிவிடும்.
ஆனால் எனது கதையில் வரும் தவளை அவ்வாறு மூழ்காது.
Ein wenig vorher hatte ein Junge,
der in einem englischen Dorf
an der Küste wohnt und
manchmal mit dem Boot seines Vaters,
der Fischer ist, aufs Meer hinausfährt,
wieder einmal das Boot genommen,
ohne seinen Vater zu fragen.
Das hat er schon oft getan.
Aber diesmal hat der Junge nicht aufgepasst,
wie das Wetter sein wird.
Das war sein Fehler.
இங்கிலாந்து கரையிலுள்ள ஒரு கிராமத்தின் மீனவச் சிறுவன், சிலநேரத்தில் தந்தையின் படகை எடுத்துக் கொண்டு கடலுக்குச் செல்வதுண்டு. கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தனது தந்தையைக் கேட்காமலே திரும்பவும் ஒருதடவை படகை எடுத்துச் சென்றுவிட:டான்.
அவன் இதை அடிக்கடி செய்திருக்கின்றான்.
ஆனால் இந்தத் தடவை காலநிலை எப்படி இருக்கும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டான்.
அது அவனது பிழை.
Er ruderte immer weiter
aufs Meer hinaus,
und mit einem Mal kamen
haushohe Wellen auf ihn zu,
schleuderten das Boot herum, warfen es hoch.
Der Junge, den ich einfach Edward nenne,
verliert das eine Ruder aus der Hand
und treibt ganz hilflos auf dem Meer.
Immer wieder schwappt Wasser ins Boot, und Edward versucht, es mit den Händen hinauszuschöpfen.
Das kann ihm gar nicht mehr gelingen.
Es dauert nicht lange, bis das Boot so voller Wasser ist, dass es untergeht wie ein Stein.
நீண்டதூரம் கடலில் படகை ஓட்டிச் சென்ற அவனை நோக்கி வந்த வீடளவு பெரிய அலைகள் படகைச் சுழற்றி புரட்டிப்போட்டு உயரத்துக்கு தூக்கி எறிந்தன.
எட்வேர்ட் என்று சாதாரணமாக என்னால் அழைக்கப்படுகின்ற அந்த இளைஞன், தனது கையிலிருந்த படகு செலுத்தும் ஒரு துடுப்பைத் தவற விட்டதனால் உதவி எதுவுமின்றி கடலில் அநாதரவாக விடப்படுகின்றான்.
படகுக்குள் தண்ணீர் வரத்தொடங்குகின்றது. எட்வேட் தனது கைகளினால் அவற்றை வெளியேற்ற முயற்சிக்கின்றான்.
அவனது முயற்சி வெற்றியடையவில்லை.
படகு நிறைய நீர் நிரம்பவும், படகு ஒரு கல்லைப்போல கீழே முழ்கிவிடவும், நீண்டநேரம் எடுக்கவில்லை.
Der Junge hat furchtbare Angst,
schreit, ruft um Hilfe, aber niemand hört ihn.
Die Wellen reißen ihn hin und her,
er schluckt eine Menge Wasser, und
er versucht zu schwimmen.
Eigentlich ist er ein guter Schwimmer,
aber in diesem tobenden Meer
kann er gar nicht mehr schwimmen.
அந்த இளைஞன் மிகவும் பயமடைந்து சத்தம் போட்டு தன்னை காப்பற்றும்படி கத்துகின்றான். ஆனால் ஒருவருக்கும் அது கேட்கவில்லை.
அலைகள் அங்கும் இங்கும் இழுத்துச்செல்ல குறிப்பிட்ட அளவு நீரைக் குடித்த அவன் நீந்துவதற்கு முயற்சி செய்கின்றான்.
உண்மையாகவே அவன் ஒரு சிறந்த நீச்சல்வீரன். ஆனால் இப்படியான கொந்தளிக்கும் கடலில் அவனால் சிறிதும் நீந்தமுடியவில்லை.
Da sieht er den Frosch.
Der Frosch wird von einer Welle
auf ihn zugetrieben.
Er ist prall von Luft.
Der Junge hält sich an ihm fest
und reitet auf dem Frosch die Wellen
hinauf und hinunter,
und so kommt er an Land.
Nun hat mein Frosch sogar einen Jungen gerettet.
அங்கே அவன் தவளையைக் காண்கின்றான்.
ஒரு அலையால் அந்தத் தவளை அவனுக்கு அருகில் தள்ளப்படுகின்றது.
அது முழுவதும் காற்று நிரம்பியிருக்கிறது.
இளைஞன் அந்தத் தவளையைப் பிடித்து, அதன்மேல் ஏறி, அலைகளில் மேலும் கீழுமாக சவாரிசெய்து கரையை வந்தடைகின்றான்.
இப்போது எனது தவளை உண்மையிலேயே ஒரு இளைஞனைக் காப்பாற்றியுள்ளது.
Und zum Schluss noch eine Geschichte:
Der Frosch ist weggeschwommen.
Es ist schönes Wetter
und er kommt schnell nach England.
Dort findet ihn ein Mädchen, das mit seiner Mutter am Strand entlanggeht.
Das Mädchen sagt:
Das ist ein lustiger Frosch,
den möchte ich behalten.
Die Mutter sagt:
Vielleicht möchte der Frosch
aber weiterschwimmen.
இறுதியாக இன்னுமொரு கதை.
தவளை நீந்திப்போய்விட்டது.
காலநிலை நன்றாக இருக்கின்றது. அது விரைவாக இங்கிலாந்துக்கு வந்துசேருகின்றது. அங்கே கரையோரமாக தனது தாயாருடன் நடந்துசென்ற ஒரு சிறுமி அதைக் காண்கின்றாள்.
அந்தச் சிறுமி கூறுகின்றாள்.
இது ஒரு விநோதமான தவளை, இதை நான் வைத்திருக்கப்போகின்றேன்.
அதற்கு தாய் கூறுகின்றாள்:
சிலவேளை இந்தத் தவளை தொடர்ந்து நீந்த விரும்பலாம்.
Weißt du was, wir kleben ein Pflaster auf den Frosch und schreiben mit einem
dicken Stift, den das Wasser nicht auslöschen kann, darauf: Der Frosch hat Susanne in England guten Tag gesagt.
Wer ihn findet, soll ihn weiterschicken!
Und sie schicken den Frosch wieder fort aufs Meer.
என்ன செய்யலாம் தெரியுமா?, நாங்கள் ஒரு பிளாஸ்ரரை தவளையின்மேல் ஒட்டி, அவ்வாறு ஒட்டிய பிளாஸ்ரரில், தண்ணீரில் அழிந்து போகாத தடித்த பேனா ஒன்றினால் எழுதுவோம்.
இத்தவளை இங்கிலாந்தில் உள்ள சுசன்னவுக்கு வணக்கம் தெரிவித்தது, யார் இதைக் கண்டு எடுக்கிறீர்களோ, அவர்கள் தொடர்ச்சியாக இவ்வாறு எழுதி அனுப்பவும்
உடனே அந்தத் தவளையை திரும்பவும் கடலில் விடுகின்றார்கள்.
In Holland findet ihn ein Junge,
der heißt Egon,
und er klebt auch wieder ein Pflaster
mit seinem Namen drauf.
Der Frosch schwimmt weiter;
er kommt nach Frankreich.
In Frankreich klebt ein Mädchen
einen Zettel drauf, das heißt Jacqueline;
in Spanien ein Junge, der heißt José.
Und am Schluss ist der reiselustige Frosch voll geklebt mit Namen.
Er schwimmt hinaus aufs Meer und kommt nie wieder an einen Strand.
ஒல்லாந்து நாட்டிலுள்ள ஏகோன் என்ற இளைஞன் அதைக் கண்டெடுத்து, தனது பெயரை ஒரு பிளாஸ்ரரில் எழுதி, அதைத் தவளையின்மேல் ஒட்டி அனுப்பிவிடுகின்றான்.
அந்தத் தவளை தொடர்ந்து நீந்திச்சென்று பிரான்ஸ் நாட்டுக்கு வருகின்றது.பிரான்ஸில் இதைக் கண்டெடுத்த ஒரு சிறுமி, ஜக்குலின என்ற தனது பெயரை ஒரு தாளில் எழுதி தவளையின் மேல் ஒட்டி அனுப்புகின்றாள்.
இறுதியாக பிரயாண ஆர்வம் கொண்டிருந்த அந்தத் தவளை முழுவதும் பெயர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
கடலில் நீந்திச் சென்று கொண்டிருந்த அந்தத் தவளை ஒருபோதும் கரைக்குத் திரும்பி வரவேயில்லை.
Und was erzählt ihr jetzt für eine Froschgeschichte?
இப்போது நீங்கள் என்ன தவளைக் கதை சொல்லப்போகிறீர்கள்?